ரொமான்ஸ்ல வீக்.. இது தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்! ரெடின் வாழ்க்கை அப்போ அவ்ளோதானா
Actor Reddin Kingsley: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை கடந்து வந்திருப்போம். நாகேஷிலிருந்து தொடங்கி இப்போது யோகிபாபு வரை மக்களை எந்த வகையில் சிரிக்க வைக்கலாம் என்ற விதத்திலேயே இவர்களின் நடிப்பு இருந்திருக்கிறது. அதுவும் சமீபகாலமாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறும் நிலைமையும் தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் கோலிவுட்டில் காமெடி காட்சியில் நடிக்க நடிகர்கள் தட்டுப்பாடு இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலைமையில்தான் தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களை ஈர்த்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர் படத்தின் மூலம் இயக்குனர் நெல்சனால் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் ரெடின் கிங்ஸ்லி. தொடர்ந்து நெல்சன் படத்தில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: கடைசி 10 படங்கள்.. வசூல் சக்கரவர்த்தி யார்?!.. சூப்பர்ஸ்டாரா?.. தளபதியா?!. வாங்க பார்ப்போம்!..
டாக்டர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் ரெடின் நடித்தார். நெல்சன் படம் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில்தான் ரெடினுக்கு திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை நடிகை சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் அவருடைய திருமணத்திற்கு திரையுலகில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.
சூட்டிங் பிரேக்கில் அவரது திருமணம் நடைபெற்றதாக ரெடினே ஒரு மேடையில் கூறினார். இந்த நிலையில் ஒருபிரபல சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதை ரெடின் பெற்றார். அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் மேடையிலேயே ரெடினுக்கும் சங்கீதாவுக்கும் மறுபடியும் திருமணத்தை நடத்தி பார்க்க ஆசைப்பட்டு மாலையை கொடுத்து மாற்ற சொன்னார்கள்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்ற எம்ஜிஆர்… தோல்வியில் முடிய இதுதான் காரணமா?..
இதை கொஞ்சமும் எதிர்பாராத ரெடின் இது தெரிந்திருந்தால் நான் கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன். எனக்கு திருமண செலவு மிச்சம். சாப்பாடு செலவு மிச்சம் என கூறினார். மேலும் ரெடினுக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியாதாம். அதனால் மனைவி சங்கீதா கொஞ்சம் கொஞ்சமாக ரெடினுக்கு சொல்லித்தருவதாக கூறினார்.