முருகதாஸை அசிங்கப்படுத்திய நடிகர்.. வேறு நடிகருக்கு போன வாய்ப்பு.. அட அந்த படமா?!..

by சிவா |
murugadas
X

தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித், சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை எடுத்து தான் ஒரு நல்ல திரைக்கதை ஆசிரியர் என நிரூபித்தார். இந்த படம் முருகதாஸின் இமேஜையே மாற்றியது.

murugadas

அதன்பின் அஜித்தை வைத்து மிரட்டல் என்கிற படத்தை துவங்கினார். ஆனால், அஜித் அந்த படத்திலிருந்து விலகினார். அதன்பின் அந்த கதையை வேறு சில நடிகர்களிடம் சொல்லி பார்த்தார் முருகதாஸ். ஆனால், யாரும் நடிக்க முன்வரவில்லை. அதன்பின் வேறு ஒரு புதிய கதையை உருவாக்கி விக்ரம், சிம்பு என பலரிடம் அந்த கதையை முருகதாஸ் கூறினார். ஆனால், யாருக்கும் பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: என் புருஷன் சாவ கிடக்குறாரு.. எங்க பணத்தை கொடுத்துடு!.. கதறும் நயன்தாராவின் அத்தை…

madi1

madhavan

அதன்பின் முருகதாஸை ஒரு நடிகரிடம் அழைத்து சென்றார் இயக்குனர் மனோபாலா. ஆனால்,முருகதாஸ் அந்த கதையை சீரியஸாக சொல்லி கொண்டிருந்த போது அந்த நடிகர் கதையை சரியாக கூட கேட்கவில்லை. இதைப்பார்த்து ‘கதையை சீரியஸாக கேளுங்கள்’ என மனோபாலா சொல்ல, அந்த நடிகர் ‘சாரி இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை’ என சொல்லிவிட்டாராம்.

இதனால் கோபமடைந்த மனோபாலா உடனே மற்றொரு நடிகரிடம் அழைத்து சென்றார். முருகதாஸ் சொன்ன கதை அந்த நடிகருக்கு பிடித்திருந்தது. அப்படி உருவான திரைப்படம்தான் கஜினி. நடிக்க மறுத்த நடிகர் மாதவன். நடிக்க சம்மதித்த நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வழுவழு கண்ணம் மூடு ஏத்துது!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி சூடேத்தும் அதுல்யா…

Next Story