Connect with us

சார் என் படத்தை கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்… ரஜினியிடம் கோரிக்கை வைத்த நடிகர்….

rajini

Cinema News

சார் என் படத்தை கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்… ரஜினியிடம் கோரிக்கை வைத்த நடிகர்….

நடிகர் ரஜினிக்கு ஒரு பழக்கம் உண்டு. புதிய படங்கள் ரிலீஸ் ஆகி ‘படம் நன்றாக இருக்கிறது’ என்கிற பேச்சு எழுந்தால் உடனே அந்த படத்தை பார்த்து விடுவார். அவரை அப்படம் கவர்ந்தால் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பாராட்டுவார். சமீபத்தில் கூட மாநாடு மற்றும் ராக்கி ஆகிய படங்களை பார்த்து விட்டு அந்த படக்குழுவினரை பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், தருண் குமார் மற்றும் அபர்நிதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிய தேன் படத்தை பார்க்குமாறு நடிகர் ரஜினிக்கு நடிகர் தருண் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

thaen

இது பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள தருண் குமார் ‘ரஜினி சார் நீங்கள் ஃபிரியாக இருக்கும் போது என் படத்தை பாருங்கள். தேன் படம் கடந்த மார்ச் மாதம் தியேட்டரில் வெளியானது. உங்களுக்கு திரையிட்டு காட்ட நாங்கள் முயற்சி செய்தோம். இப்போது தேன் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் நீங்கள் காணலாம்’ என பதிவிட்டுள்ளார்.

தேன் திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படமாகும். மலைவாழ் மக்களில் ஒருவர் தனது அடையாளத்தை தேடும் முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் ஒரு வரிக்கதையாகும்.

thaen

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top