இந்தியன் 2 படத்துல நடிக்கும்போது அப்படியா நடந்தது? ரசவாதி நடிகர் என்னென்னமோ சொல்றாரே!

by sankaran v |   ( Updated:2024-05-17 08:54:56  )
Indian 2
X

Indian 2

தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரசவாதி இந்தப் படத்தில் நடிகர் ரிஷி நடித்துள்ளார். இவருக்கு இந்தியன் 2 படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... அப்பவே வித்தியாசமான படங்களில் நடித்த மக்கள் நாயகன்!.. சாமானியன் படத்துல நடிக்க இதுதான் காரணமாம்!

இந்தப் படம் வந்து எனக்கு ஸ்கூல் மாதிரி. கமல் சார் கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். படம் நல்லா வந்துருக்கு. இந்தப் படத்துக்குத் தான் ஏதோ ஒண்ணு சூட்டிங் முன்னாடி இருந்தே ஏதோ வந்து வந்து போன மாதிரி இருந்தது. எந்தப் படத்துக்கும் அப்படி நடக்கல. என்ன நடந்துச்சு? என்னன்னே புரியல. பயம் கிடையாது. எனக்கு என்னன்னா இந்தியன் 2 படக்குழுவிலேயே குட்டி பையன் நான் தான். எல்லாரும் ஜீனியஸ். எனக்கு என்னன்னா இவ்ளோ பெரிய ஆப்பர்சுனிட்டி கிடைச்சிருக்கு. அதை வேஸ்ட் பண்ணாம நல்லா யூஸ் பண்ணிக்கனும்னு தான் இருந்தது.

கமல் சார் கிட்ட வந்து நிறைய கத்துக்கிட்டேன். அவரு ஒன்மோர் கேட்டா எப்படி இருக்கும். அவரு அந்த ஷாட்ல பயங்கரமா பர்பார்ம் பண்ணி இருந்தாலும், நான் கிளாப் தட்டுற மாதிரி எனக்கு தோணுச்சு. இருந்தாலும் குழந்தை மாதிரி இறங்கி வந்து இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணிப் பார்க்கலாமான்னு கேட்டார் கமல். இவ்வளவு ஏஜ் ஆகியும் இவ்ளோ விஷயங்கள் பண்ணினதுக்கு அப்புறமும் இப்படி கேட்குறாரு. அந்த விஷயம் அவருக்கிட்ட கத்துக்கிட்டேன்.

இதையும் படிங்க... விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

டைரக்டர் ஷங்கர் சார் கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஒருத்தரைப் பார்த்ததுமே அவருக்கு என்ன வரும், என்ன வராது? எது அவரு பண்ணினா நல்லா இருக்கும்? அந்த மாதிரியான விஷயங்கள் கத்துக்கிட்டேன். அது மட்டுமல்லாமல் அவருக்கிட்ட டிசிப்ளின். ஒர்க் விறுவிறுப்பா அடுத்தடுத்து வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாரு. அவருக்கிட்ட புரொபஷனல் கத்துக்கிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story