Connect with us

Cinema History

ரெண்டு வருஷ சம்பளத்தை அப்படியே வாங்குனேன்! – முதல் படத்துலயே ஆர்.ஜே பாலாஜிக்கு கிடைத்த சம்பளம்!

எஃப்.எம் துறையில் ஆர்.ஜேவாக இருந்து, பிறகு காமெடியனாக நடித்து, தற்சமயம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் திரைப்படங்களாகவே உள்ளன.

அதிலும் மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் என்றே கூறலாம். வீட்ல விஷேசம் திரைப்படத்திற்கு பிறகு போன மாதம் அவர் நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எஃப்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்த போது சாமானிய மக்களை போல அவரும் மாதம் 30,000 சம்பளத்திற்கு பணிப்புரிந்து வந்தார்.

2013 காலக்கட்டங்களில் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் ஆர்.ஜே பாலாஜி. இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் காமெடியனாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திற்காக மொத்தம் 11 நாட்கள் அவர் நடிக்க வேண்டியிருந்தது. அதற்கு சம்பளமாக ரூபாய் 6 லட்சம் அவருக்கு தரப்பட்டது. கிட்டத்தட்ட அவரின் 2 வருட சம்பளத்தை 11 நாட்கள் நடிப்பதற்காக சம்பளமாக கொடுத்தனர். அப்போதுதான் சினிமாவில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதை ஆர்.ஜே பாலாஜி அறிந்துக்கொண்டார். ஒரு பேட்டியில் இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top