Vijay: எனக்கும் விஜய்க்கும் இருக்கிற டீலிங்.. ‘எல்லாம் அவன் செயல்’ ஆர்கே சொன்ன சர்ப்ரைஸ்

rk
Vijay:சமீப காலமாக நடிகர் ஆர்.கே பற்றிய செய்திதான் இணையதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட பெரிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கியது பேசு பொருளாக பார்க்கப்பட்டது. அடிப்படையில் ஒரு தொழிலதிபரான ஆர் கே எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் ஈர்க்கப்பட்டார்.
அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று சராசரி வசூலையும் ஈட்டியது. அதற்கு அடுத்தபடியாக அழகர் மலை, என் வழி தனி வழி ,வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு அவன் இவன், பாயும் புலி போன்ற படங்களிலும் எதிர்மறையான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார். அதன் பிறகு இவரை படங்களில் அவ்வளவாக பார்க்க முடியவில்லை.
ஏற்கனவே வெல்கம் சிட்டி என்ற பெயரில் ஒரு வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஆர்கே. ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வரும் இவர் விஜயை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்தார். விஜய்க்கும் தனக்கும் இடையே பிசினஸ் இருந்ததாகவும் நான் அவரிடம் இடத்தை விற்று இருக்கிறேன். அவரிடம் இருந்து இடத்தை வாங்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
அது மட்டும் அல்ல இப்போது ஆர் கேவின் தலைமை அலுவலகம் இருக்கும் இடம் விஜயின் இடம் தான் என்றும் அது தனக்கு பிடித்து விஜயிடம் கேட்டபோது தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதன் பிறகு தான் அடையாறு அலுவலகத்தில் இந்த இடம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து அந்த இடத்தை நான் வாங்கினேன் என்றும் ஆர்கே கூறினார்.
இந்த இடம் சம்பந்தமாக எனக்கும் விஜய்க்கும் இடையில் நான்கு முறை பரிவர்த்தனையும் நடந்திருக்கிறது என்று ஆர் கே கூறினார். இவர் வில்லுப்பாட்டுக்காரன், பொய் ,தூண்டில் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அதன் பிறகு தான் சிந்தாமணி கொல கேஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மறு ஆக்கமான எல்லாம் அவன் செயல் படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். அந்த படம் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்ற திரைப்படமாக இருந்து வருகிறது .ஆனால் இப்பொழுது அவர் படங்களில் நடிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.