விஷால் பட நடிகர் வீட்டில் நடந்த பயங்கரம்… மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் கொள்ளை..செய்தது யார் தெரியுமா?..
விஷால் நடித்த “அவன்-இவன்” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன். இவர் “எல்லாம் அவன் செயல்”, “அழகர் மலை”, “புலி வேஷம்”, விஜய் நடித்த “ஜில்லா” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
நடிகர் ஆர்.கே. சென்னை நந்தம்பாக்கம் அருகே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரது மனைவியை கட்டிப்போட்டுவிட்டு பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக தகவல் வெளிவந்தது.
வீட்டின் பின்பக்கம் வழியாக 3 பேர் உள்ளே நுழைந்ததாகவும், ஆர்.கே.வின் மனைவியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பணத்தையும், 200 சவரன் நகையையும் கொள்ளையடித்து சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே. வீட்டில் வேலை செய்த ரமேஷ் என்பவர் தனது சகாக்களுடன் இணைந்து தனது முதலாளி வீட்டிலேயே கொள்ளையடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளதாம். இதனை தொடர்ந்து ரமேஷ் மற்றும் அவரது சகாக்களை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். நடிகர் ஆர்.கே. வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.