பிரபல நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

by சிவா |
manohar
X

இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மனோகர். சில படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இவர்தான் வசனம் எழுதினார்.

மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், தென்னவன், சபரி, சலீம், வீரம், மிருதன், ஆண்டவன் கட்டளை, விஸ்வாசம், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

manohar

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 20 நாட்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் தற்போது மரணமடைந்துவிட்டார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story