ரோபோ சங்கரை வண்டியில் வச்சு தள்ளிட்டு போகும் மனைவி! ஐய்யோ என்னாச்சு? வைரலாகும் வீடியோ

Actor Robo Sankar: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோசங்கர். விஜய் டிவியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் பிரபலமான ரோபோசங்கர் மீடியாவிற்குள் வருவதற்கு முன்னரே ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு ஆங்காங்கே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.

அதன் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். விஜய் டிவியில் கிடைத்த பிரபலத்தை வைத்து வெள்ளித்திரைக்குள் வந்தார் ரோபோசங்கர். பல படங்களில் நடித்து வந்த ரோபோசங்கர் சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார்.

இதையும் படிங்க: எண்ட்ரிக்கு முன்னாடி இதை செய்ய திட்டமிடும் விஜய்!… அவர் கேரியரில் இதான் முதல்முறையாம்…

அந்த இடைப்பட்ட நாள்களில் உடல் மெலிந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை திகிலடைய வைத்தது. அதன் பிறகு பல சிகிச்சைகள் மேற்கொண்டு இப்போது மீண்டும் மீடியா முன் தோன்றியிருக்கிறார் ரோபோ சங்கர். மதுவினால் தன் உடலை அவரே கெடுத்துக் கொண்டதன் விளைவுதான் இது.

ஆனாலும் இழந்த வாய்ப்புகளை பெற மீண்டும் போராடி முயற்சித்து வருகிறார் ரோபோ சங்கர். விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களிலும் ரோபோ சங்கரை சமீபகாலமாக காணமுடியவில்லை. இந்த நிலையில் இன்று தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார் ரோபோ சங்கர்.

இதையும் படிங்க: லீகலா 2 கல்யாணம்!. இல்லீகலா எத்தனை வேணா பண்ணுவேன்!.. 3வது கல்யாணம் பற்றி பேசும் வனிதா…

அதில் துபாய் விமான நிலையத்தில் லக்கேஜை தள்ளும் வண்டியில் ரோபோவை வைத்து அவர் மனைவி தள்ளிக் கொண்டே வருகிறார். கூடவே கவுண்டமணியின் பிரபலமான காமெடியான ஐய்யோ முனுசாமி என்ற காமெடி டையலாக்கை சொல்லிக் கொண்டே போகும் மாதிரியான அந்த வீடியோவைத்தான் இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C2rdZ2AiWoW/?igsh=dTM4ejk0cTN4ODFk

 

Related Articles

Next Story