இத செஞ்சாதான் நைட் தூக்கமே வருமாம்! அஜித்தின் ரகசியத்தை பகிர்ந்த ரோபோசங்கர்

Published on: June 14, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் இப்போது இந்தியா முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை  முடித்திருக்கிறார்.அடுத்ததாக உலக அளவில் தனது பயணத்தை ஆரம்பிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் தனது விடாமுயற்சி படத்தைப் பற்றியும் ஆலோசனையில் இருந்து வருகிறார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி சில ரகசியங்களை நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அஜித்தும் ரோபோ சங்கரும் வேதாளம் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். அதன் மூலம் அஜித்தின் சில குணாதிசயங்களை நேரில் பார்த்திருப்பதாகவும் அதை இந்தப் பேட்டியில் கூறுகிறேன் என்று பகிர்ந்திருக்கிறார்.

ajith1
ajith1

ஒரு சில பேர் சூட்டிங்கை முடித்து வெக்கேஷன் போவாங்க, ஆனால் அஜித் சூட்டிங்கை முடித்து ஆப்ரேஷன் தியேட்டருக்குத்தான் போவார் என்று ஆரம்பித்தார். அந்த அளவுக்கு மூட்டில் பல வழிகளுடன் விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடலுக்கு ஆடியிருப்பார். ஆடி முடித்ததும் அவர் மூட்டு விலகி வந்து நிற்கும். அதை அப்படியே ஒரு கயிறை வைத்து இறுக்க கட்டிருவாராம்.

அதன் பிறகு தனியாக ஒரு இடத்தில் போய் கத்தி அழுவாராம். அப்புறம் வந்து ஷார்ட்டுக்கு ரெடி என்று சொல்லி நடிக்க வந்துவிடுவாராம் அஜித். மேலும் சூட்டிங்  முடிந்து ஒவ்வொரு டெக்னீஷியன்கள் எல்லாம் போகும் போது எதாவது கொடுத்தனுப்புவாராம் அஜித். அதிலும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால் ஒரு சாக்லேட் மூடைகளை இறக்கி அதை கொடுத்தனுப்புவாராம்.

அதன் பின் கடைசியாக அனைவருக்கும் பிரியாணி சமைத்து போடுவாராம். ஒரு சமயம் ரோபோ சங்கருக்கு அஜித்தே அருகில் இருந்து சாப்பாடு பரிமாறினாராம். அதை ரோபோ சங்கர் இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வீடியோ எடுத்துக்கிட்டுமா? என்று  அஜித்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் முடியவே முடியாது என சொல்லிவிட்டாராம்.

ajith2
ajith2

அஜித் எனக்கு சாப்பாடு பரிமாறினார் என்று சொன்னால் நம்ப மாட்டானுங்க சார் என்று சொல்ல அதற்கு அஜித் விழுந்து விழுந்து சிரித்தாராம். அதுமட்டுமில்லாமல் அன்றைய சூட்டிங் முடிந்தாலும் எல்லாரும் தூங்க போயிருவாங்களாம். ஆனால் அஜித் மட்டும் இரவு 2 மணி வரைக்கும் ஒரு நீண்ட நடைபயிற்சி செய்து விட்டு தான் தூங்குவாராம். இது அவர் செய்யக் கூடிய தினசரி பழக்கமாம்.

மேலும் தனக்கு என்று உதவியாளர்களை எப்போது கூடவே வைத்துக் கொள்ள மாட்டாராம். அவரே நாற்காலியை எடுத்துப் போட என சக நடிகர்களுடன் அமர்ந்து அரட்டை அடிப்பாராம். இரண்டு பேர் இருப்பார்களாம். அவர்களிடம் ஸ்டிரிக்டா அஜித் ‘என் பின்னாடியே வரக்கூடாது, யார் வந்து பேசினாலும் அவர்களை தடுக்கக் கூடாது’ என்று சொல்லிவிடுவாராம்.

இதையும் படிங்க : அந்தம்மாவுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகம் – MGR மட்டும் இல்ல… அந்த நடிகருடனும் அப்படித்தான் இருந்தாங்க!”