தடபுடலாக சுற்றும் ரோபோ சங்கர்.. மகள் திருமணத்திற்கு இவங்கெல்லாம் வர்றாங்களா? கொலமாஸ்தான்
Actor Roboshankar: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ரோபோ சங்கர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மாரி, சிங்கம், விஸ்வாசம், போன்ற படங்களில் நடித்த ரோபோ சங்கர்,
அவ்வப்போது சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். தற்போது தனது ஒரே மகள் இந்திரஜாவின் திருமண ஏற்பாடுகளில் படு பிஸியாக இருந்துவருகிறார் ரோபோ சங்கர். தனது சொந்த மாமாவான கார்த்திக்கை காதலித்து வந்த இந்திரஜாவின் காதலை ரோபோ சங்கரும் அவரது மனைவியும் ஏற்க இவர்களது திருமணம் மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: படம் நல்லா இருக்குனு சொல்ல லஞ்சமா? பிரபல விமர்சகரின் முகத்திரையை கழித்த டாப் ஸ்டார்…
மதுரையில் பிரம்மாண்டமாக திருமணத்தை வைத்திருக்கும் ரோபோ சங்கர் சென்னை வாழ் நண்பர்களுக்காக சென்னையில் மார்ச் 31 ஆம் தேதி வரவேற்பும் வைத்திருக்கிறாராம். இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை கொடுத்து வருகிறார்.
சினிமாத்துறையில் கமல் இருந்து ஆரம்பித்து ஜெயம் ரவி, சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, சத்யராஜ், ஆரி, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, எஸ்.ஏ.சந்திரசேகர் வரைக்கும் அரசியல் பிரபலங்களில் உதய நிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சுப்பிரமணியம், சீமான், தங்கம் தென்னரசு என அனைவரையும் அழைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: எல்லா செண்டர்லயும் ஹிட்டான அஜித் படம்.. விஜய் படத்தோட நிலைமை தெரியுமா? இவ்ளோ நாள் சொன்னது பொய்யா?
இனிமேல் தான் ரஜினிக்கும் அழைப்பிதழை வைக்க இருக்கிறார். இவர்கள் லிஸ்ட்டில் கண்டிப்பாக அஜித்தும் இருப்பார் என்று தெரிகிறது . இருவருமே படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் சென்னைக்கு வந்த பிறகு அவர்களையும் நேரில் ரோபோ சங்கர் சந்திப்பார் என தெரிகிறது.