எம்ஜிஆரை விட எனக்கு அதான் முக்கியம்!.. வந்த வாய்ப்பை தட்டிக் கழித்த வில்லன் நடிகர்..
தமிழ் சினிமாவில் முக்கியமான முதன்மையான நடிகராக வலம் வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நாடக மேடையில் இருந்து வந்து சினிமா மேடையில் கோலோச்சியவர். அதனால் வந்த மரியாதை மற்றும் அன்பால் தன் பயணத்தை அரசியலிலும் செலுத்தினார்.
அரசியலிலும் முதன்மை தலைவராகவே வலம் வந்தார். சினிமாவில் இருக்கும் போது அவருக்கு என்று ஒரு மரியாதை, அன்பு, பலம் என இருந்தது. அதை சரியான முறையில் தக்கவைத்துக் கொண்டார் எம்ஜிஆர். அவருடன் பயணித்தவர் எம்ஜிஆர் இருந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என நினைக்கும் போது அதை எங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என்று பல பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவரோடு பழக வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்பதையும் தாண்டி அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பெருமையே போதும் என்று சொல்லும் மனிதர்களுக்கு மத்தியில் எம்ஜிஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தும் அதை ஒரு மறுத்திருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. பழம்பெரும் நடிகரும் வில்லன் நடிகருமான மனோகர். அவருடைய இயற்பெயர் லட்சுமி நரசிம்மா. மனோகரா நாடகத்தில் நடித்ததனால் மனோகர் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. நாடகத்தில் பெரும் ஆவல் உடையவர் மனோகர். சினிமாவை காட்டிலும் நாடகத்தை தன் உயிராக கருதுபவர்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு நல்ல நண்பனாக இருந்தார் மனோகர். அதே போல ஜெயலலிதா மதிக்கும் நடிகர்களில் மனோகரும் ஒருவர். இதனால் தமிழ் நாட்டின் இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியில் அமர வைத்தார். இவரின் ஆர்ப்பறிக்கும் வசனமும் உச்சரிப்பும் கம்பீர தோற்றமும் சினிமாவும் இவரை விடவில்லை.
ஒரு சமயம் எம்ஜிஆருடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படவாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அதே தேதியில் அவர் ஒரு நாடகத்திற்காக தேதியை ஒதுக்கியிருந்தார். இதுவே வேற ஒரு நடிகர் என்றால் எம்ஜிஆர் படமா? என்று அப்படியே விட்டுவிட்டு வந்து விடுவார்கள்.
ஆனால் மனோகர் அப்படி செய்யவில்லை. இதில் தான் அவர் நாடகத்தை எந்த அளவுக்கு நேசித்தார் என்பது தெரிகிறது. எம்ஜிஆர் படமாக இருந்தாலும் தனக்கு அதே தேதியில் நாடகம் இருக்கிற காரணத்தால் எம்ஜிஆர் படவாய்ப்பை தட்டிக் கழித்தாராம் மனோகர். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?.. தன்னுடன் ஆட வந்த நம்பியாரிடம் வாய்க்கொழுப்பை காட்டிய சில்க்.. சும்மா இருப்பாரா?..