தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க!.. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம்..

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் ஆர்.எஸ்.சிவாஜி. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜுடன் வலம் வரும் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் பேசிய ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ வசனம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக வருவார். அதேபோல், கார்கி படத்திலும் சாய்பல்லவின் அப்பாவாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல திரைப்படங்களிலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் இவரை பார்க்கலாம்.

யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லக்கிமேன் படத்திலும் ஆர்.எஸ்.சிவாஜி நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அவர் மரமணமடைந்தார். இவருக்கு வயது 66.

இவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு படம் ஹிட் அடிச்சா இப்படியா!. வேற லெவலில் சம்பளம் கேட்கும் ரஜினி!. கையை பிசையும் தயாரிப்பு நிறுவனம்..

 

Related Articles

Next Story