ஹாட்டான உடையில் ‘ஊ சொல்றியா’பாடலுக்கு நடன பயிற்சி...வைரல் வீடியோ....
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் கணவரை பிரிந்த பின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்த பாடலுக்கு அவர் கவர்ச்சியான உடைகளில் பயிற்சி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பது கூடுதல் சிறப்பு.
மேலும், The family man 2 படத்தை இயக்கிய இரட்டைஇயக்குனர்கள் இயக்கும் ஒரு புதிய வெப் சீரியஸிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மொத்தத்தில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார்.
#OoAntavaOoOoAntava / #OoSolriyaOoOoSolriya Song Behind The Scenes #Samantha ????#PushpaTheRise #Pushpa#SamanthaRuthPrabhu pic.twitter.com/w7wofHG9mZ
— Only Heroines (@OnlyHeroines) January 6, 2022