இத செய்ற வரைக்கும் சும்மா விட மாட்டோம்! ஞானவேல் ராஜாவுக்கு சமுத்திரக்கனி கொடுத்த கடைசி வார்னிங்

Published on: November 30, 2023
sam
---Advertisement---

Samuthirakani about Gnanavelraja: அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசியது பெரும் பேசு பொருளாக மாறியது. பிரபலங்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் ஞானவேல் ராஜா அமீரை மிகவும் தரக்குறைவாகவும் அருவருக்கத்தக்க உடல் மொழியாலும் பேசி கேவலப்படுத்தியிருந்தார்.

சமூகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் அதுவும் சமூகத்திற்கு தேவையான அக்கறையுள்ள தரமான படத்தை கொடுத்த ஒருவரை பற்றி ஞானவேல் ராஜா இப்படி பேசியது  மிகவும் கீழ்த்தனமான செயல் என சமுத்திரக்கனி ஆரம்பத்தில் தனது ஆதரவை அமீருக்காக கொடுத்தார்.

sam1
sam1

இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..

அவரை தொடர்ந்து பொன்வண்ணன், கரு. பழனியப்பன், கவிஞர் சினேகன் , சுதா கொங்கரா போன்ற பல இயக்குனர்கள் முன்வந்தனர். அதனை தொடர்ந்து திடீரென ஞானவேல்ராஜா தான் பேசியது தவறு என்றும் அமீர் என்னுடைய அண்ணன் போன்றவர் என்றும் ஒரு மன்னிப்புக் கடிதத்தை இணையத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் சமுத்திரக்கனி ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பதிலுக்கு ஒரு ட்விட்டை போட்டிருக்கிறார். அதாவது இந்த மன்னிப்பு சீனெல்லாம் இங்க செல்லாது என்றும் எந்த வாயால சேற்றை வாரி இறைச்சீங்களோ அதே பொதுவெளியில் அதே வாயால பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இதுதான் லாஸ்ட் ஸ்டேஜ்! கேப்டன் சிகிச்சை குறித்து விளக்கமளித்த மருத்துவர் – இப்படியெல்லாம் இருக்கா?

அதுமட்டுமில்லாமல் பருத்திவீரன் படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், கலைஞர்கள் என இன்னும் சில பேருக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் அவர்கள் எல்லாம் சாதாரண குடும்பத்தில் வந்தவர்கள் என்றும் நீங்கள்தான் அம்பானி ஆச்சே . அதனால் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடவும் என்றும் கூறி அந்த பதிவில் போட்டிருக்கிறார்.

sam2
sam2

கூடவே ஞானவேல் ராஜா கேட்ட மன்னிப்பு கடிதத்தையும் சேர்ந்து பதிவிட்டிருக்கிறார் சமுத்திரக்கனி. கடைசியில் அறம் வெல்லும். வெல்வோம் என்று கேப்ஷனோடு அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.