தமிழ்த்திரை உலகில் நடிகராக இருந்து இயக்குனர் ஆனவர். மீண்டும் நடிகரானவர் என பல முகங்களைக் காட்டும் ஹீரோக்கள் பலர் உள்ளனர். அவர்களில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஆன்மிகத்தைப் பற்றி என்னென்ன சொல்றாருன்னு பார்ப்போமா…
சமுத்திரகனியின் சொந்த ஊர் ராஜபாளையம் பக்கத்தில் உள்ள சேட்டூர். பள்ளியில் 1ம் வகுப்பு படிக்க சேர்க்கும்போது அப்பா அவரோட நண்பரது பெயரை வைத்தார். அதுதான் சமுத்திரக்கனி.
அதற்கு முன்பு இவரோட பெயர் தங்கப்பவுனு. பள்ளியில் சேர்க்கும்போது பவுணினு பேரு வைத்தால், பின்னாளில் பையனைக் கூப்பிடும்போது வருத்தப்படுவான்னு வேற பெயர் வைக்கச் சொல்லி இருக்கிறார் வாத்தியாரு. அப்படி வச்ச பேரு சமுத்திரக்கனி. இவரோட பேருக்கு இதுதான் அர்த்தமா… சமுத்திரக்கனி அப்பாவிடம் இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு கேட்டுள்ளார். அதற்கு அவர் சமுத்திரத்தில் விளையக்கூடிய கனி, முத்துன்னு சொன்னாராம்.
சமுத்திரக்கனி பிஎஸ்சி. மேக்ஸ் படித்தார். வரலாறு பாடம்னா ரொம்பவே ஆர்வமாம். குறிப்பாக நம்மோட மூதாதையர்களைப் பற்றிப் படிக்கும்போது நமது கலைகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்க்கின்ற கண்ணோட்டமே மாறிப்போச்சு. நமது மூதாதையரின் வாழ்க்கை முறை அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் உள்ளன. அறிவியலை பின்னாலப் போட்டுட்டு வாழ்க்கையைப் பற்றிய பாடங்களை முன்னாடி வச்சாங்க.
சின்ன வயசில இருந்தே நான் கும்பிட்டு வளர்ந்தது எங்க மூதாதையர், எங்க முப்பாட்டன் அய்யனாரைத்தான். அய்யனாருக்கு அடுத்தது சிவன் தான். 13 வயசிலேயே சிவன் சம்பந்தமான நிறைய புத்தகங்களை வாங்கி படிச்சிருக்கேன். படிக்க படிக்க பக்தியை மட்டும் தூண்டல. ஆன்மிகத்தோடு அறிவியலையும் சேர்த்து பார்க்க வச்சது.
கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சைப் பெரிய கோயில் இதெல்லாம் மிகப்பெரிய அறிவியல் ஆச்சரியங்கள். தமிழ்நாட்டுல இருக்குற நிறைய சிவன் கோவில்களுக்குப் போயிருக்கேன். எங்க சதுரகிரி மலையில் ஏராளமான விஷயங்கள் புதைஞ்சு கெடக்குது.
என்னைப் பொறுத்தவரைக் கோயிலுக்குப் போயி சாமிக்கிட்டே எனக்கு இதைக் கொடு, அதைக்கொடுன்னு கேட்குற பக்தியோகம் எல்லாம் கிடையாது. நம்மால யாருக்கும் எந்தக் கெடுதலும் வந்துடக்கூடாது. நம்மால எந்த அளவு முடியுமோ அந்த அளவு உதவி பண்ணனும்கறது தான் ஆன்மீகம் என்கிறார் சமுத்திரக்கனி.
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…