தப்புனு proof பண்ணுங்க!.. ஜெயிலுக்கு போக தயார்!.. ராவணகோட்டம் படத்தால் சாந்தனுவுக்கு வந்த நெருக்கடி..
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சாந்தனு. அப்பா ஒரு பெரிய இயக்குனராக கதாசிரியராக வசனகர்த்தாவாக இருந்தாலும் தன்னுடைய சொந்த உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்னும் நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டு வருகிறார் சாந்தனு. இவரின் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் வெளி வந்தாலும் இன்னும் அந்த நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
இன்னும் போராடிக் கொண்டுதான் வருகிறார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது ராவண கோட்டம் என்ற திரைப்படம். இந்தப் படத்தை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். படத்தை தயாரித்தவர் கண்ணன் ரவி.
இந்தப் படம் இரு கிராமங்களுக்கு இடையே எழும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படமாகும். மேலும் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக இந்த படம் இருந்தாலும் இரு வேறு சமூகத்தைச் சார்ந்த காதலர்களால் அந்த கிராமத்திற்கு வரும் பிரச்சனையையே இந்த படம் சொல்ல இருக்கின்றது. ஆனால் இந்தப் படம் நாளை திரைக்கு வெளிவர இருக்கும் நிலையில் இந்த படத்தின் மீது சில குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அதற்கு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .இது யாரையும் புண்படுத்தும் படி அமையவில்லை என்றும் படம் பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் இந்த படம் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கும்படி இல்லை என்றும் கூறி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சாந்தனு ஒரு சேனலில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார் .அந்த பேட்டியில்" இந்த படத்தில் அந்த சமூகத்தினர் சொல்வது போன்று ஏதாவது இருந்தால் அதை நானும் என்னுடைய இயக்குனரும் முதலமைச்சருக்கு படத்தை போட்டு காட்டி நிரூபிப்போம், அதையும் மீறி அந்த படத்தில் தவறு ஏதும் இருந்தால் கண்டிப்பாக நாங்கள் ஜெயிலுக்கு போகவும் தயாராக இருக்கிறோம்" என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.