அவனுக்கு ஆடவே தெரியாது!..நான்தான் சொல்லி கொடுப்பேன்!.. சீக்ரெட் சொன்ன விஜய் நண்பர்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் விஜய். அப்பா இயக்குனர் என்பதால் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் நுழைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். துவக்கத்தில் இவர் நடித்த படங்களில் சரியாக ஓடவில்லை. ஆனால், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி ஆகிய படங்களின் வெற்றி விஜயின் சினிமா கேரியரை வேறு மாதிரி மாற்றியது.
மற்ற நடிகர்களிடமிருந்து விஜய் வேறுபடுவதே அவரின் நடன திறமையில்தான். நடனம் ஆடித்தான் வாலிப பசங்களை தன்பக்கம் வளைத்தார். தமிழ் சினிமாவில் எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத நடன திறமையை கொண்டிருப்பதால் ‘மனுஷன் இப்படி ஆடுகிறாரே’ என சக நடிகர்களே பொறாமைப்படும் படி நடனம் ஆடி அசரவைப்பார். திரைப்படங்களில் ஒரு பாடல் காட்சியை எடுக்கும்போது ஒரு நடன இயக்குனர் இருப்பார். அவர் சொல்லி கொடுப்பதைத்தான் நடிகர்கள் ஆடுவார்கள். பல நடிகர்களும் நடனமாட திணறுவார்கள். பல டேக் எடுப்பார்கள். பல ஒத்திகை செய்துவிட்டு டேக்குக்கு செல்வார்கள். ஆனால், விஜய் நடன இயக்குனர் ஆடுவதை ஒருமுறை பார்ப்பார். அவ்வளவுதான்!. நேரிடையாக ஆடிவிடுவார்.
மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என அனைத்து படத்திலும் அவர் நடனமாடுவதற்காகவே ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. விஜயும் துள்ளலான நடனமாடி அசத்தியிருப்பார். ஆனால், கல்லூரியில் படிக்கும் போது விஜய் நடனத்தில் அவ்வளவு திறமை வாய்ந்தவராகவெல்லாம் இல்லையாம்.
இதுபற்றி சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசிய விஜயின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் ‘விஜயும் நானும் ஒன்றாக லயோலா கல்லூரியில் படித்தோம். அப்போது கல்லூரி விழாக்களின் போது நாங்கள் ஒன்றாக நடனமாடுவோம். விஜய்க்கு சரியாக ஆட வராது. முன்னால் வந்து ஆடாமல் ஒரு ஓரத்தில் நின்று ஆடிக்கொண்டிருப்பான். நான்தான் அவனுக்கு நடனமாட சொல்லி கொடுப்பேன். ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கியபின் அவரின் நடனத்தை பார்த்து நான் ஆச்சர்யபட்டேன்’ என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: உன் படத்துல விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடு ப்ளீஸ்!.. பார்த்திபனிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி!…