விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த குரு யார் தெரியுமா ? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்
Actor Vijay: கோலிவுட்டில் இன்று ரஜினிக்கு இருக்கும் அதே மாஸ் விஜய்க்கும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ரஜினி 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பெற்ற புகழை 30 வருடத்தில் விஜய் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் தராசில் இருக்கும் ஒரு தட்டுக்கள் போலத்தான் இந்த கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியின் படங்களை பார்த்து பார்த்து சினிமாவிற்கு வந்தவர் விஜய் என அனைவருக்கும் தெரியும். முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் அவரை ஒரு குறிப்பிட்ட அந்தஸ்த்துக்கு கொண்டு சென்ற படமாக செந்தூரப்பாண்டி திரைப்படம் அமைந்தது.
இதையும் படிங்க: இந்த மாதிரி படம் எடுத்தது ஒரு தப்பா? பயில்வான் கேட்ட கேள்வியால் விழிபிதுங்கி நின்ற இயக்குனர்
அதற்கு காரணமாக இருந்தவர் விஜயகாந்த். ஆரம்பம் முதலே விஜய் நன்கு நடனம் ஆடக் கூடியவர். டான்ஸ் மாஸ்டர்கள் டான்ஸையும் தாண்டி விஜயின் டான்ஸ் ரசிக்கும் படியாக இருக்கும். அவருடைய டான்ஸில் ஒரு க்ரேஷ் ஸ்டைல் என பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றும். அவருடன் நடிக்கும் ஒரு சில நடிகைகளே விஜயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதை நினைத்து பயந்த காலம் எல்லாம் நடந்திருக்கிறது.
அவருடைய டான்ஸில் வேகம் இருக்கும். இந்த நிலையில் விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததே நான்தான் என ஒரு பிரபலம் கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. விஜயின் நண்பரான சஞ்சீவ் தான். கல்லூரியில் படிக்கும் போது விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்ததே சஞ்சீவ்தானாம். அப்போது விஜயை விட சஞ்சீவ்தான் சிறப்பாக டான்ஸ் ஆடுவாராம்.
இதையும் படிங்க: ஈஸ்வரி முகத்தில் அடித்த எழில்… கோபிக்கு ஆப்படித்த புது தொழில்.. என்னங்க இப்படி ஆச்சு?
ஆனால் விஜய் சுமாராகத்தான் டான்ஸ் ஆடுவாராம். இவ்வாறு கூறிய சஞ்சீவின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இருவருமே சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இப்போது வரைக்கும் விஜயுடன் நெருக்கமாக இருக்கும் நண்பர்களில் சஞ்சீவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.