கழட்டிவிட்ட சந்தானம்...தட்டி தூக்கும் யோகிபாபு...மனுஷன் பொழக்க தெரிஞ்சவருதான்!...
திரையுலகில் சில இயக்குனர்கள் சில ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுப்பார்கள். ஆனால், சில காரணங்களால் அந்த இயக்குனர்களுக்கு அந்த ஹீரோக்கள் மீண்டும் வாய்ப்பு தரவே மாட்டார்கள். அது புரியாத விஷயமாகவே இருக்கிறது.
இந்த வரிசையில் நடிகர் சந்தானமும் இணைந்துள்ளார். சந்தானத்தை வைத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை இயக்கியவர் ஸ்ரீநாத். அந்த படமும் ஹிட் அடித்தது. அதேபோல், சந்தானத்தின் கேரியரில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த ‘A1′ படம்தான். அப்படத்தை இயக்குனர் ஜான்சன் என்பவர் இயக்கினார்.
இந்நிலையில், ஸ்ரீநாத் மற்றும் ஜான்சன் என இருவரையுமே சந்தானம் தற்போது கண்டுகொள்ளவில்லை. ஆனால், இருவருமே யோகிபாபுவை வைத்து ஆளுக்கொரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். யோகிபாபு அவர்களின் கதையில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
சினிமா உலகம் தொழிற்போட்டி நிறைந்தது என்பது சகஜம்தான். ஆனால், வெற்றி கொடுத்த இயக்குனர்களை ஹீரோக்கள் மறக்கக் கூடாது என திரையுலகினர் பேசி வருகிறார்கள்.