10 லட்சம் பணமும் வீடும் கட்டிக் கொடுத்த சந்தானம்! எந்த நடிகருக்கு தெரியுமா?
Actor Santhanam: தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம் இன்று ஒரு ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கின்றார். அதுவும் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியும் கூட. அந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களை காமெடியாக சித்தரித்து தொகுத்து வழங்குவதே இந்த லொள்ளு சபாவின் முக்கிய நோக்கம்.
90கள் காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருந்து வந்தனர். அதில் நடித்த நடிகர்கள் தான் இன்று சினிமாவில் பல முக்கிய அந்தஸ்தை பெற்ற நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். அதில் சந்தானம், யோகி பாபு ,சுவாமிநாதன் போன்ற நடிகர்கள் அனைவரும் திரைப்படங்களிலும் இப்போது நடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கோட் படத்துல விஜயகாந்த் வர்ற சீன் அப்படி இருக்குமாமே..! அவரே சொல்லிட்டாரே..!
இதில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சந்தானத்துடன் நடித்து வந்த காமெடி நடிகர் பாலாஜி. இவருக்கு உடல் நலம் சரியில்லாத போது சந்தானம் 10 லட்சம் பணம் கொடுத்து உதவி இருக்கிறார் என நடிகர் சுவாமிநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு சந்தானம் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்ததும் அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது.
அதனால் நல்ல ஒரு ரீச்சில் இருந்தார். அந்த நேரத்தில் தான் பாலாஜிக்கு தேவையான உதவிகளை எல்லாம் சந்தானம் வழங்கி வந்தார். ஆனால் உடல் நலம் சரியில்லாமல் பாலாஜி இறந்து போக அப்போதும் சந்தானம்தான் அந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியதாக சுவாமிநாதன் கூறியிருக்கிறார். பாலாஜியின் மறைவிற்குப் பிறகு அவருடைய மனைவிக்கு சந்தானம் புதியதாக ஒரு வீடு கட்டி கொடுத்தாராம்.
இதையும் படிங்க: டேய் எனக்கே ஒன்னும் புரியலை… கோட் படத்துக்கு விஜய் சொன்ன முதல் கமெண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
அதனால் அவருடன் நடித்த சக நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் சந்தானம் முதல் ஆளாக வந்து நிற்பார் என சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இதற்கு முன் நாம் கேள்விப்பட்ட வடிவேலு செய்திகளை எல்லாம் பார்க்கும் பொழுது அவரோட நடித்த சக நடிகர்கள் எத்தனையோ பேர் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போயிருக்கின்றனர். அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வடிவேலு வரவில்லை. ஆனால் சந்தானம் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.