தமிழ் திரையுலகில் காமெடியனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த சந்தானம் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் .சின்னத்திரையில் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சந்தானம் வல்லவன் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் நகைச்சுவை நடிகராக இந்த வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.
அவரை சினிமாவிற்கு கொண்டு வந்தது நடிகர் சிம்பு தான். அதனால் சிம்புவின் ஆரம்ப கால படங்களில் சந்தானத்தை காண முடியும். இருவரும் சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றனர். அதன்பிறகு இனிமே இப்படித்தான் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக களமிறங்கினார் சந்தானம். முதல் படம் நல்ல ஒரு வரவேற்பை தந்ததால் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கும் முடிவை எடுத்தார் சந்தானம்.
இதையும் படிங்க: விமர்சனம் பண்ணுவாங்க!.. அதுக்கெல்லாம் தடைப்போட முடியாது.. ஒரே போடா போட்ட நீதிமன்றம்..!
அதிலிருந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா , ஏ1, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார் .தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக இரு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படங்களை முடித்துவிட்டு அடுத்து புதிய அவதாரம் எடுக்கப் போவதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
அதாவது இயக்குனராக புது அவதாரம் எடுக்கிறாராம் சந்தானம். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இப்போது இறங்கி இருக்கிறாராம். அது மட்டும் அல்ல. அந்த ஸ்கிரிப்ட் வேலைகளில் தன்னுடன் நான்கு உதவியாளர்களை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடிய சீக்கிரம் இயக்குனராக சந்தானம் பணியாற்றும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இவர் நடித்த அறை எண் 305ல் கடவுள், டிடி ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படமாக மாறியது. இதில் லொள்ளு சபா என்ற விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய கெரியரை ஆரம்பித்த சந்தானம் அந்த நிகழ்ச்சியில் லீடு ரோலிலேயே நடித்து வந்தார்.
இதையும் படிங்க: வியாபாரம்னு வரும் போது நீயும் குள்ளமணியும் ஒன்னுதான்.. ரஜினியின் முகத்துக்கெதிரா பேசிய பிரபலம்
ஒரு காலத்தில் ஹீரோக்கள், இயக்குனர்கள் என சந்தானத்தின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவுக்கு அனைவரும் விரும்பும்படியான நடிப்பை உழைப்பை தரக் கூடியவர் சந்தானம்.
