Cinema News
ஐய்யயோ அவரு பொண்ண தொடமாட்டாரு! தெரியாம போய் மாட்டிக்கிட்டேன் – டி.ஆர் பண்ண அலும்பல் குறித்து சந்தானம் பேட்டி
Santhanam – TR: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் தனது வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருந்த சந்தானத்தை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தது சிம்பு.
தான் நடித்த வல்லவன் படத்தில் சந்தானத்தை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து பல ஹீரோக்களுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நகைச்சுவையை அள்ளிக் கொடுத்து மக்களை சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க: நடித்த படம் வேற.. வெளிவந்த படம் வேற! வினுசக்கரவர்த்தி கதையில் கமல் நடித்த படத்திற்கு வந்த சோதனை
சிம்புவுக்கு நண்பராக நடித்த சந்தானம் அவருடைய அப்பாவான டி.ஆருக்கும் நண்பராக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்தப் படம்தான் வீராச்சாமி. அந்தப் படத்தில் டி.ஆர் கால்பந்து வீரராக நடித்திருப்பார். அவருடன் கூடவே இருக்கும் நண்பர்களாக சந்தானம் மற்றும் எம்.எஸ்.வி,பாஸ்கர் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
அந்தப்படத்தை டி.ஆர். படமாக்கும் போது ஒரு லாங் ஷார்ட்டில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்களாம். அந்த இடைப்பட்ட கேப்பில் நீச்சல் குளம் இருந்ததாம். நீச்சல் குளத்தின் அந்தப் பக்கம் ஹீரோ,ஹீரோயின் சீன். நீச்சல் குளத்தின் இந்தப் பக்கம் டி.ஆர் கேமிராவை வைத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்! கோடீஸ்வரராக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?
ஹீரோவின் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லாததால் கோபமடைந்த டி.ஆர் அவருடைய பாணியிலேயே பேசிக் கொண்டு டக்குனு நீச்சல் குளத்தில் குதித்து நீந்திக்கொண்டே ஹீரோ ஹீரோயின் இருக்கும் இடத்திற்கு சென்றாராம்.
அங்கு போய் ஹீரோவை பளார் பளாரென அறைந்து விட்டு அந்த ஹீரோயினிடம் எப்படி ரியாக்ட் பண்ண வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தாராம். இதற்கிடையில் எந்த பெண்ணையும் தொடாத டி.ஆர். சந்தானத்தை அழைத்து நிற்க வைத்தாராம்.
இதையும் படிங்க: பால் பப்பாளி!.. வெள்ளை தக்காளி.. பளிச்சென காட்டி பதற வைக்கும் தமன்னா.. பசங்க எல்லாம் பத்திரமா இருங்க!..
சந்தானத்தை ஹீரோயினாக நினைத்து ஒரு வழி ஆக்கிவிட்டாராம். சொல்லிக் கொடுத்த பிறகு மீண்டும் அதே நீச்சல் குளத்தில் நீந்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாராம். வந்து டவல் வைத்து துடைப்பார் என்று பார்த்தால் அப்படியே ஆக்ஷன் என்று சொல்லி படமாக்கிக் கொண்டிருந்தாராம் டி.ஆர். இதை ஒரு பேட்டியில் சந்தானம் கலாய்த்துக் கொண்டே கூறினார்.