சிம்பு இல்லாம நான் இல்ல!. அவர் பின்னாடி எப்பவும் நிப்பேன்!.. ஃபீலிங்கா பேசிய சந்தானம்!…

by சிவா |   ( Updated:2025-05-06 04:09:51  )
simbu
X

#image_title

சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். திறமை இருந்தாலும் தூக்கிவிடவோ, நம்பி வாய்ப்பு தரவோ ஒருவர் இருக்க வேண்டும். ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் ஒருவருக்கு வாய்ப்பாக மாறும். இப்போது பல கோடிகள் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பல வருடங்களுக்கு முன்பு கூட்டத்தில் ஒருவராக நிற்கும் வேடங்களில் நடித்தவர்கள்தான்.

சந்தானம், சூரி, யோகிபாபு என எல்லோருக்கும் இது பொருந்தும். இதில் சந்தானம் விஜய் டிவி மூலம் சினிமாவுக்கு வந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இவர். தமிழில் ஹிட் அடித்து ரசிகர்களால் ரசிக்கப்பட்ட பல முக்கிய படங்களை நக்கலடித்து காமெடியாக மாற்றி சிரிக்க வைத்திருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு பல சினிமா பிரபலங்களே ரசிகர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தான் நடித்த மன்மதன் படத்தில் சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. அதேபோல் அடுத்து அவர் இயக்கிய வல்லவன் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைத்தார். அதன்பின் பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார் சந்தானம்.

#image_title

ஆர்யா, ஜீவா, சிம்பு, விஷால், விஜய், அஜித் உள்ளிட்ட பலருடனும் நடித்து ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவை போல மாறினார். ஆனால், திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். காமெடியனாக நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். சந்தானம் போன பின் தமிழ் சினிமாவில் காமெடி வறட்சியே வந்துவிட்டது.

இப்போது சிம்பு கூப்பிட்டதால் அவரின் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சந்தானம். இந்த படத்தில் அவருக்கு காமெடி மட்டுமில்லாமல் முக்கிய வேடம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சந்தானம் ‘காதல் அழிவதில்லை படத்தில் கும்பலில் நின்று கொண்டிருந்தேன். என்னை பார்த்து மன்மதன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் சிம்பு.

அந்த படத்தில் நான் அறிமுகமாகும் முதல் காட்சியில் ‘உங்களோட இண்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிரோம். கண்டிப்பா மக்கள் கைத்தட்டுவாங்க’ என சொன்னார். அன்னைக்கு எனக்கு கைத்தட்டல் வரணும்னு யோசிச்சவர் இன்னைக்கும் அப்படிதான் யோசிக்கிறார். எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்க சொல்லுவாரு.. எப்போதும் அவர் பின்னாடி நான் இருப்பேன்’ என பேசியிருக்கிறார்.

Next Story