இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷ் கனகராஜை சீண்டும் சந்தானம்!..
80ஸ் பில்டப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் காமெடியாகப் பேசி அசத்தினார்.
கே.எஸ்.ரவிகுமார் சார் சொன்னாங்க. சந்தானம் தொடர்ந்து காமெடிலயே போய்க்கிட்டு இருக்காருன்னாங்க. அதுக்கு முக்கிய காரணம் என்னோட ரசிகர்கள். இந்தப்படத்துக்கு ஞானவேல் சார் தான் டைட்டில் வச்சிருப்பாருன்னு நினைச்சேன்.
இப்ப வர்ற நிறைய படங்கள்ல 80ஸ் பாட்டைப் போட்டு ஹீரோவப் பில்டப் பண்றாங்க. நம்ம 80ஸ்ல படம் எடுத்து அதுக்கு ஏன் பில்டப்னு படம் வைக்கக்கூடாது அப்படின்னு யோசிச்சிருப்பாரு. ஏன்னா கொஞ்சம் அந்த மாதிரி ஆளுதான் அவரு.
(80 ஸ் பாடல்களை வைத்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தான் பல படங்களில் காட்சிகளின் இடையே ஒடவிட்டு சண்டைக்காட்சிகள் எல்லாம் எடுத்திருந்தார். அதனால் மறைமுகமாக அவரைக் கிண்டல் செய்வது போல தெரிகிறது. )
நாங்க ரெண்டு பேரும் கோவை பாஷைல பேசிக்கொள்வோம். அவரும் நானும் ஒரே டைம் பீரியடுல தான் சினிமாவுல அடி எடுத்து வச்சோம். ஆரம்பத்துல நாள் கணக்குல தான் நான் சம்பளம் வாங்கினேன்.
கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த நாள் கணக்குல வாங்குன சம்பளத்தையே கொஞ்சம் அதிகமாக்குனேன். ஞானவேல் ராஜா வந்தாரு. அப்புறங்கண்ணான்னாரு. சொல்லுங்கண்ணான்னாரு. இந்த மாதிரி நான் படம் பண்ணலாம்னு இருக்கேன்னாரு. சரிங்கண்ணேன்.
இடம் ஏதாவது வாங்கிருக்கீங்களான்னு கேட்டாரு. இல்ல. எங்கண்ணா காசு மொத்தமா வருதுன்னு சொன்னேன். இப்ப டேட் ஃபேஸ் வேணாம். 3 படம் பண்றோம்னா ஒரு படத்துக்கு ஒரு அமௌண்ட். இந்தாங்க 50 பர்சன்ட் அட்வான்ஸ்னு தந்து போய் இடம் வாங்குங்கன்னாரு. எவ்வளவுண்ணா தருவீங்கன்னு கேட்டேன்.
இவ்வளவுன்னாரு. இருங்கண்ணன். நான் ஒரு நாள் யோசிச்சி சொல்றேன்னேன். அப்புறம் வந்து ஏன்ணா நீங்க 50 பர்சன்ட் கொடுக்கறதுக்கு நான் டே ஃபேஸ்ல சம்பளம் வாங்குனா 3 இடத்தை வாங்கிடுவேன்னு சொன்னேன். உடனே சிரிச்சாரு. அது பிச்சிப் பிச்சி தான் வாங்கணும்.
அதெல்லாம் சேர்த்து வச்சி வாங்கவே முடியாதுன்னாரு. ரெண்டு பேரோட டீலுங்கும் ஒத்துப்போச்சு. அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, சிங்கம் 2ன்னு நினைக்கிறேன்.3 படத்துக்கும் அட்வான்ஸ் அதுவும் பெரிய அமௌண்ட் 50 பர்சன்டா கொடுத்தாரு. அப்ப தான் நான் முதன் முதலா இடமே வாங்குனேன்.