Maharaja Movie:இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு ஒரு போதாத காலமாக இருந்த நிலையில் மகாராஜா திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையே ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படமாக அமைந்தது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தின் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தான் மகாராஜா திரைப்படம் .
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மம்தா மோகன் தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ் ,சிங்கம் புலி, அபிராமி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர் ,தமிழில் இந்தப் படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, தொடர்ந்து ஹீரோவாகவே தோல்வியை சந்தித்த விஜய் சேதுபதிக்கு இந்த மகாராஜா திரைப்படம் ஐம்பதாவது திரைப்படமாக அமைந்து பெரும் வெற்றியை தேடி கொடுத்தது ,
இதையும் படிங்க: இதுக்கு மேல வேண்டாம்!. தாங்காது!. டூ பீஸில் அதிரவிட்ட மாளவிகா மோகனன்…
அதுவரை வில்லனாகவே மாஸ் காட்டி வந்த விஜய் சேதுபதி எப்படியாவது ஹீரோவாகவும் ஜெயிக்க வேண்டும் என போராடி வந்த நிலையில் இந்த மகாராஜா திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தை பற்றி நித்திலன் சாமிநாதன் ஒரு பேட்டியில் கூறும்போது முதலில் மகாராஜா படத்தின் ஸ்கிரிப்டை வைத்துக்கொண்டு தான் வாய்ப்புகளுக்காக தேடிக் கொண்டிருந்தாராம் நித்திலன்.
ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியவர் மகாராஜா படத்தின் ஸ்கிரிப்டை வைத்து பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் ஸ்கிரிப்டை கேட்ட பல பேர் இந்த கதை எல்லாம் இங்கு செட்டு ஆகாது எனக் கூறி அனுப்பி விட்டார்களாம். அதோடு பல நடிகர்களிடமும் வாய்ப்பு கேட்டிருக்கிறார் நித்திலன். அதில் சாந்தனுவும் ஒருவர்.
இதையும் படிங்க: இத்தனை நாளா விஜய் சேதுபதி அங்கேயா இருந்தாரு? என்ன ஒரு டெடிகேஷன்!
சாந்தனுவுக்கு இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பிடித்து போக அவர் சில தயாரிப்பாளர்களை அணுகியிருக்கிறார். ஆனால் அவர்கள் இந்த படத்தை எல்லாம் பண்ண முடியாது என சொல்லிவிட்டார்களாம். அதன் பிறகு தான் நித்திலன் சாமிநாதன் அந்த ஸ்கிரிப்டை அப்படியே வைத்துவிட்டு குரங்கு பொம்மை படத்தை எடுத்திருக்கிறார். அந்த படம் பெரும் வெற்றி அடையவே மீண்டும் மகாராஜா திரைப்படத்தின் ஸ்கிரிப்டை எடுத்து அதில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்து விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நித்திலன் சாமிநாதன்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…