‘இந்தியன் 2’ எடுக்கும் போது ஷங்கர் தூங்கிருப்பாரு! ரஜினி நண்பரே இப்படி சொல்லலாமா?
Indian 2 Movie: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சங்கர் தொடர்ந்து ஜீன்ஸ், முதல்வன், எந்திரன், இந்தியன் போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
ஷங்கர் என்றாலே அவருடைய படங்கள் பிரம்மாண்டம் தான் என்ற ஒரு சிறப்பு இன்று வரை இருந்து வருகிறது. கதை இருக்கிறதோ இல்லையோ பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்று தான் கூறுவது வழக்கம். ஒரு படத்தில் அமைந்த ஒரு பாடலுக்கு கோடிக்கணக்கில் செலவுகளை இழுத்து விடும் சங்கர் அவர் எடுத்துவரும் கேம் சேஞ்சர் படத்திற்காக ஒரு பாடலுக்கு எட்டு கோடி வரை செலவழித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இத விட ஒரு கிஃப்ட் எதுவும் இல்ல! தாய் ஷோபாவிடம் இருந்து விஜய்க்கு பறந்த செய்தி
இந்த நிலையில் அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ட்ரோலுக்கு ஆளான திரைப்படம் இந்தியன் 2.ஷங்கரின் சினிமா கெரியரில் இந்த அளவு விமர்சனத்தை அவர் பார்த்திருக்கவே மாட்டார். படம் வெளியானதில் இருந்து இப்போது வரை இந்தியன் 2 படத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகர் சரண்ராஜ் இந்தியன் 2 படத்தை பற்றி ஒரு விழா மேடையில் பேசியிருக்கிறார். இவர் பாட்ஷா படத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பராக நடித்திருப்பார். அவர் கூறும் போது மகாராஜா திரைப்படத்தை பற்றி மிகவும் பாராட்டி பேசி இருந்தார். இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவிற்கு மிக மிக அவசியம் என்றும் கூறினார் சரண்ராஜ்.
இதையும் படிங்க: முத்து-மீனா பிரச்னை முடிஞ்சிது… அரசுவேலைக்கு தயாராகும் செந்தில்.. எழில் பிறந்தநாளுக்கு வருவாரா?
அதேபோல் இந்தியன் 2 படத்தை நான் பார்த்தேன். அந்தப் படம் சுத்த வேஸ்ட். படத்தை எடுக்கும் போது ஷங்கர் தூங்கி இருப்பார் என நினைக்கிறேன். இதற்கு முன் ஷங்கரின் படங்களை பார்த்தால் எப்படியும் ஒரு பாடல் ஹிட் ஆகும். ஒரு ஃபைட் ஹிட் ஆகும். ஆனால் இந்தியன் 2 படத்தில் ஒண்ணுமே இல்ல. நான் ஷங்கரை படம் முழுக்க தேடினேன்.
எங்கேயும் சங்கர் எனக்கு தெரியவே இல்லை. எப்படி இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்தார் என எனக்கு தெரியவில்லை. ஒன் மேன் ஆர்மியா கமல் இந்த படத்தில் அசத்தியிருக்கிறார். அவருடைய நடிப்பையும் திறமையும் நாம் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. படத்தில் வேற எதுவுமே இல்லை என கூறியிருக்கிறார் சரண்ராஜ்.
இதையும் படிங்க: விஜய்க்கு பிடித்த எண் இதுதானாம்! கூட்டிக் கழிச்சு பாருங்க.. சரியா வரும்