அடி வாங்கிட்டு வந்து என்கிட்ட புலம்புவான் ஷங்கர்! - போட்டு உடைச்சிட்டாரே ஜென்டில்மேன் நடிகர்!
Indian2: ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து பிரபுதேவாவை வைத்து காதலன் என்கிற படத்தை இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையாலேயே இந்த படம் ஓடியது.
அதன்பின் ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0, ஐ என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கினார் ஷங்கர். இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் பெரிய இயக்குனராகவும் ஷங்கர் மாறினார். எனவே, ஹிந்தி நடிகர்களும் அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் வேண்டானு சொன்னாலும் பக்க பலமா இருப்பேன்! இவர முதல்ல புடிங்கப்பா
மீண்டும் கமலை வைத்து அவர் இயக்கிய இந்தியன் 2 படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. கதை, திரைக்கதை இரண்டுமே ரசிகர்களை கவரவில்லை. அதோடு, படத்தின் நீளமும் அதிகமாக இருந்ததால் ரசிகர்களை சோதித்தது.
எனவே, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இல்லை என சொல்ல தியேட்டரில் காத்து வாங்கியது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ரசிகர்களை இந்த அளவுக்கு எந்த படமும் ஏமாற்றியதில்லை என்கிற இடத்தை இந்தியன் 2 பிடித்துவிட்டது. இந்நிலையில், ஜென்டில்மேன் படத்தில் நடித்த நடிகர் சரண்ராஜ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தியன் 2 பார்த்தேன். இந்த படத்தில் ஒன்றுமே இல்லை.. படம் எடுக்கும்போது ஷங்கர் தூங்கிவிட்டான் என நினைக்கிறேன் என சொல்லி இருந்தார். அதன்பின் ‘நீங்கள் இப்படி சொல்கிறீர்களே.. இதை வைத்து ஷங்கரை ட்ரோல் செய்ய மாட்டார்களா?’ என ஒரு செய்தியாளர் கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன சரண்ராஜ் ‘இதுவரை ஷங்கர் எடுத்த படங்களை பாருங்கள். இந்தியன் 2-வில் கமல்ஹாசனை தவிர அந்த படத்தில் என்ன இருக்கிறது?.. ஒரு காட்சி கூட நன்றாக இல்லை. ஷங்கர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வேலை செய்தபோது படப்பிடிப்பில் கோபம் வந்தல் எஸ்.ஏ.சி ஷங்கரின் கன்னத்தில் ஒரு அறை விடுவார். அப்போதெல்லாம் என்னிடம் வந்து ஷங்கர் புலம்புவான். அவரின் மீது இருக்கும் அக்கறையில்தான் இதை சொன்னேன்’ என சரண்ராஜ் பதிலளித்தார்.
இதையும் படிங்க: அந்த தேதில ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்… அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கிய சூர்யா!..