நமீதாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய சரத்பாபு!.. சாகும் முன் அவரின் கடைசி ஆசை?

Published on: May 23, 2023
sarath
---Advertisement---

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் மிகவும் அசாத்தியமாக நடிக்க கூடிய நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சரத்பாபு. குணச்சித்திர வேடங்களில் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகர் சரத்பாபு. கலெக்டர், பணக்காரர் ,எஜமான் என எந்த ஒரு கௌரவ வேடமாக இருந்தாலும் அதற்காகவே பிறந்தவர் போல படங்களில் தோன்றி மக்களை மகிழ்வித்தவர்.

1973 ஆம் ஆண்டில் தெலுங்கு படத்தில் அறிமுகமான சரத்பாபுவை கே .பாலச்சந்தர் தன்னுடைய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் முள்ளும் மலரும் என்ற படத்தில் தான் சரத் பாபுவை தமிழக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வந்தார்.

sarath1
ramaprabha

தன்னுடைய 21வது வயதில் நடிகை ரமா பிரபாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமண உறவும் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பழம்பெறும் நடிகரான நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த உறவும் நீடிக்கவில்லை. அவரையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் சரத் பாபு. சென்னையின் உள்ள தன்னுடைய வீட்டில் வசித்து வந்த சரத் பாபு அவ்வப்போது ஹைதராபாத்தில் இருக்கும் தனது சகோதர சகோதரிகளை அவ்வப்போது பார்த்துவிட்டு வருவாராம்.

சென்னை டி நகரில் இருக்கும் சரத் பாபுவின் அந்த வீடு நம்பியார் அவருக்காக அன்பாக கொடுத்த வீடாம். இந்த நிலையில் தனது 61 ஆம் வயதில் மூன்றாவது திருமணம் செய்யப் போவதாக சரத்பாபு அறிவித்த செய்தி அப்போது வைரலானது. அதைப் பற்றி பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் அதற்கு பதில் அளித்த சரத் பாபு என்னுடைய மனது இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது. அதனால் மூன்றாவதாக திருமணம் செய்தால் என்ன என கேட்டிருந்தார்.

sarath2
sarath2

அந்த சமயத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட நமிதாவுடன் சரத்பாபு இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அதை வைத்து பல ஊடகங்கள் மூன்றாவதாக திருமணம் செய்யப் போகும் அந்த நபர் நமீதா தான் என்று பல வதந்திகளை எழுதி இருந்தனர். அதற்கும் பதில் அளித்த சரத்பாபு “அவர் ஒரு விழாவிற்கு வந்தார் .நானும் அந்த விழாவிற்கு போனேன். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் அது, நான் மூன்றாவதாக திருமணம் செய்யப் போகும் நபர் வேறொரு பெண்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சையின் இருந்ததனால் தனியாக இருந்த சரத்பாபுவை அவரது சகோதர சகோதரிகள் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் தன்னுடைய இறுதி நாட்களை அடைந்து விட்டதால் என்னுடைய கடைசி காலம் சென்னையில் இருக்கும் தன்னுடைய வீட்டில் தான் நடைபெற வேண்டும் என்று சரத் பாபு விரும்பினாராம். அதன் காரணமாகவே நேற்று அவருடைய உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது என செய்யாறு பாலு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.