நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சகோதரி!..
ஹைதராபாத்தில் வசித்து வந்த சரத்பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
45 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சரத்பாபு. ரஜினி நடித்த முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் சரத்பாபு நடித்துள்ளார். கமலுடன் இவர் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என பல நூறு படங்களில் சந்திரபாபு நடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைபாட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சரத்பாபு. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு சரத்பாபு இன்று உயிரிழந்ததாக செய்திகள் பரவி வந்தன.
ஆனால் இது வெறும் புரளியே சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருடன்தான் இருக்கிறார் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இன்று நடிகர் மனோபாலா இறந்ததை அடுத்து இந்த வதந்தி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.