இன்னும் கொஞ்சம் விட்டுருந்தா படமே டிராப் ஆயிருக்கும்! தேவயாணியால் கொந்தளித்த சரத்குமார்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. ஆரம்பத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தாலும் அந்த கவர்ச்சி தேவயானிக்கு பிடிக்கவில்லை. அதனால் இனிமேல் அந்த மாதிரி நடனம் ஆட மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.
தேவயானி கண்டீசன்
அதன் பிறகு தான் தொட்டாசினிங்கி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேவயானியை தேடி வந்தது. அப்பவும் அந்த ஒரு கண்டிஷனை போட்டு தான் நடிக்க வந்தார் .அதன்பிறகு தான் அந்த படத்தின் ஹீரோயினே தேவயானி என்று சொன்ன பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு தொடர்ந்து காதல் கோட்டை, சூரிய வம்சம், ஃப்ரெண்ட்ஸ் போன்ற பல முக்கியமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். சரத்குமார் கூட தேவயானி சூர்யவம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும், மூவேந்தர், ஒருவன், தென்காசிப்பட்டினம், அன்று கண்ட முகம், போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
காதலில் சரத்குமார்
அந்த சமயங்களில் கூட தேவையானி மீது சரத்குமாருக்கு ஒரு காதல் ஈர்ப்பு இருந்தது என்ற வதந்திகள் கூட பல செய்திகளில் உலா வந்தன. இந்த நிலையில் தேவயானி சரத்குமார் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் சரத்குமார் அடிதடியில் இறங்கியதாக பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறினார்.
அதாவது விக்ரமின் இயக்கத்தில் சரத்குமார், விக்ரம், தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். அந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார் .ஒரு சமயம் அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விக்ரமும் சரத்குமாரும் காலையிலேயே வந்து உட்கார்ந்து விட்டனராம் .முதல் ஷாட் என்பதால் சீக்கிரமே வந்து இருக்கின்றனர்.
ஆனால் நேரம் ஆக ஆக விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையுமே ஷார்ட்டுக்கு அழைக்கவில்லையாம் .அதன் பிறகு தான் தெரிந்தது தேவயானியை வைத்து ஒரு சாதாரண காட்சியை இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று. அதை பார்த்ததும் சரத்குமார் மிகவும் காண்டாகி விட்டாராம். காலையில் இருந்து உட்கார்ந்திருக்கிறோம் .ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை. தேவயானியை வைத்து ஒரு சாதாரண காட்சியை இப்படி எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என வாக்குவாதம் செய்தாராம். அந்த பிரச்சனை அப்படியே அடிதடியில் இறங்கி இருக்கிறது. அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அவர்தான் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து படத்தை மீண்டும் ஆரம்பிக்க செய்தாராம்.
இதையும் படிங்க : கவர்ச்சி பாடல் மூலமா சினிமாவுக்கு வந்த தேவயானி… இப்படியும் நடந்துச்சா?..