‘பொன்னியின் செல்வன்’ல் எனக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பரிசு!.. மார்தட்டிக் கொள்ளும் சரத்குமார்..

by Rohini |   ( Updated:2023-03-31 08:50:58  )
sarath
X

sarathkumar

மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று திரண்டு நடித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை அப்படியே படமாக எடுக்கப் படம். இரண்டு பாகங்களாக வந்திருக்கும் இந்த பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதன் இசைவெளியீட்டு விழா கூட சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நடிகர் கமல் மற்றும் சிம்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மிகப்பெரிய திருப்பங்களை கொண்டு வெளியாகும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, கரிகால் சோழனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறு பழுவேட்டரையராக பார்த்திபன் என முக்கிய கதாபாத்திரங்களில் முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் பேட்டி அளித்த போது ‘மணிரத்னம் நான் வேறொரு சூட்டிங்கில் இருக்கும் போது தொடர்ந்து நான்கு நாள்களாக என்னை வந்து கவனித்துக் கொண்டிருந்தார். அப்பவே அவர் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு நான் தான் செட் ஆவேன் என்று நினைத்து விட்டார் ’ என்று கூறினார்.

இதையும் படிங்க : அந்த படங்களை பார்க்கும் போது நான் படுற கஷ்டம்?.. மீனா தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்!..

மேலும் படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யாராயை கட்டிப்பிடிக்கும் காட்சி அந்த படத்தில் எனக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறார்கள் என்று மிகவும் வெட்கத்துடன் கூறினார்.

Next Story