அடேங்கப்பா...சரத்குமார் இவ்ளோ படங்களா வில்லனா பண்ணியிருக்காரு....!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஒரு மிகச்சிறந்த நடிகர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர். இவர் சினிமாவுக்குள் எப்படி வந்தார்? ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை அவரே சொல்ல பார்ப்போமா...
அப்பா வந்து ஆல் இண்டியா ரேடியோ டெல்லியில இருந்தாங்க. செய்திகள் வாசிப்பது ராமநாதன். நான் பொறந்தது டெல்லிலதான். ஸ்கூல் எல்லாம் அங்க தான் படிச்சேன். ஃபாதர் ட்ரான்ஸ்பர் ஆனதும் மெட்ராஸ்க்கு வந்தோம். என் ஃபாதர் நான் போலீஸ் ஆபீசராகணும்னு நினைச்சாங்க. நானும் அதைத் தான் நினைச்சேன். அப்போ தான் மறைந்த என் மைத்துனர் கே.பி.கந்தசாமி தினகரன் பேப்பரை 1977ல ஆரம்பிச்சாங்க.
அவங்க வந்து என்கிட்ட சொன்னாங்க. சார் நீங்க போலீஸ் ஆபீசர ஆனா ட்ரான்ஸ்பர் ஆவீங்க. உங்களுக்கு அரசியல் குறுக்கீடுகள் இருக்கும். நீங்க நினைச்சதை செய்ய முடியாது. சின்ன பிரெய்ன் வாஷ்னு சொல்லலாம். அவரு சொன்ன உடனே நானும் இருக்குமோ...நாம நேர்மையா நடந்துக்க முடியாதோ அப்படிங்கற சின்ன ஐயப்பாடு எனக்குள்ளே எழுந்தது.
சரி என்ன பண்ணலாம் அத்தான்னு கேட்டா நீ இந்த பத்திரிகையில இரு. அப்பாலாம் நியூஸ்ல தான இருக்காங்க. இதை டெவலப் பண்ணினா நல்லாருக்கும்னாங்க. 1977ல சேர்ந்தேன்.
தேனாம்பேட்டை தினகரன் ஆபீஸ்ல ஒரு வருஷம் டிரெய்னிங். அங்கிருந்து பெங்களூர். அங்க வந்து 3 டிபார்ட்மெண்ட் பார்த்தேன். பத்திரிகை நிருபரா, சர்க்குலேஷன் மேனேஜரா இருந்தேன். அதுக்கு அப்புறம் அட்வர்டைஸ்மெண்ட் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
அப்போ கிரைம் ரிப்போர்ட்டரா போனோம். அப்பவே எனக்கு நடிகராகணும்கற ஆசை. ஸ்கூல், காலேஜ் டேஸ்ல எல்லாம் நடிச்சிருக்கேன். நடிக்க வந்தேன். வரும்போது சான்ஸ் தேடி அலைஞ்சேன். 2 படம் தயாரிச்சேன். நடிப்புக்காக நான் எதுவும் படிக்கல. நடிப்புன்னு சொல்லும்போது எனக்கு வந்து கைகொடுத்தது...விஜயகாந்த், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், செல்வமணி சார்....இவங்க தான்.
முதல் படம் சமாஜம்ஸ்ரீன்னு ஒரு தெலுங்கு படம். விஜயசாந்தி, சுமன் உள்பட பலர் நடிச்சிருக்காங்க. அந்தப்படத்துல வில்லன் தான். தமிழ்ல நான் நடிச்ச முதல் படம் கண்சிமிட்டும் நேரம். அந்த அளவுக்கு இந்தப்படம் போகல. அதுக்கு அப்புறம் விஜயகாந்த், செல்வமணி, இப்ராகிம் ராவுத்தரோட புலன் விசாரணை படம். அதுதான் எனக்கு இந்த அளவுக்கு அந்தஸ்தைத் தந்தது.
அதுக்கு அப்புறம் 36 படங்கள் வில்லனாகத் தான் பண்ணினேன். அதுக்கு அப்புறம் பாலைவனப்பறவைகள் படம். இதுல முதல் பாதி வில்லன். நான் ஹீரோவா வந்ததுக்கு ஒரு திருப்புமுனையான படம் இதுதான். அப்புறம் காவல்நிலையம், சேரன் பாண்டியன், பெரிய கவுண்டர் பொண்ணு...இந்த மாதிரி பல படங்கள் எனக்கு ஹிட்டானது.
சூரியன் படத்துல மொட்டை அடிக்கணும்னு சொன்னாங்க. அந்தப்படத்துக்கு அது பெரிய பரிணாமமே கிடைச்சது. அடுத்து சாமுண்டி. அந்தப்படத்துக்கு விக் வைக்கல. கமல் சார் பண்ற மாதிரி பண்ணனும்னா அவரு வந்து வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ணுவாரு.
நாம நாலு படம் பண்ணிக்கிட்டு இருப்போம். அந்த சிரத்தையோட படம் பண்ணுவாரு. புதிய பரிணாமம். டிப்பரண்டா நடிக்கணும்கற அந்த ஃபீலிங் இருக்கும். பாரதிராஜா சார்ல வில்லேஜ்ல போயி படம் எடுப்பாங்க. அப்ப தான் சினிமான்னா என்னன்னே தெரிய ஆரம்பிச்சது.