என்னடா சொல்றீங்க?.. இளைய தளபதி பட்டமும் விஜயோடது இல்லையா?.. 90களில் கலக்கிய இளைய தளபதி இவர்தான்!..
தமிழ் சினிமாவில் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது தான். ஏனெனில் அவர் மௌனம் காத்து வருவது தான் இந்த கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது. ஏற்கெனவே இளைய தளபதி என்ற தன் படத்தை தளபதி என்று மாற்றி கொண்டிருக்கிறார் விஜய்.
ஆனால் அந்த இளைய தளபதி என்ற பட்டமும் விஜய்க்கு உரியதே இல்லையாம். அதை வைத்துக் கொண்டிருந்த நடிகர் வேற. 90களில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்தவர் நடிகர் சரவணன். அவர் தான் அவருடைய பெயருக்கும் முன் இளைய தளபதி என்ற பட்டத்தை வைத்திருந்திருக்கிறார்.
இதையும் படிங்க :கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்!.. உதவி செய்ய மறுத்த மனோரமா… இப்படியெல்லாம் நடந்திருக்கா??
அதுவும் அவராக வைத்துக் கொண்ட பட்டம் இல்லை. சரவணன் சேலத்தை சேர்ந்தவர். அப்போது சேலத்தில் பிரபலமாக இருந்த ஒர எம்.எல்.ஏ சரவணனின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராம். அதனால் தன் நண்பனின் மகன் சினிமாவில் நடிக்கிறான் என்ற தெரிந்ததும் சரவணனுக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுக்க வேண்டும் என எண்ணினாராம்.
ஏற்கெனவே சேலம் கல்லூரியில் படிக்கும் போது சரவணன் எலக்ஷனில் எல்லாம் நின்றிருக்கிறாராம். அப்போதே அவரை பற்றி அந்த எம். எல்.ஏ நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தளபதி என்று கொடுக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் சரவணன் நடிப்பதற்காக சென்னை போவதால் சென்னையில் ஏற்கெனவே தளபதினு ஒருத்தர் இருக்கிறார்.
சரவணன் சேலத்தில் தளபதியாக சுற்றிக் கொண்டிருந்ததனால் இளைய தளபதி என்ற பட்டத்தை கொடுக்கிறேன் என்று சேலம் நாலு ரோட்டில் ஒரு விழா எடுத்து இந்த பட்டத்தை அறிவித்தாராம் அந்த எம்.எல்.ஏ. அன்று முதல் படத்தில் அவர் பெயருக்கு முன் இளைய தளபதி என்று பட்டத்தை போட ஆரம்பித்திருக்கிறார் சரவணன்.
ஆனால் தொடர்ந்து பல படங்கள் ப்ளாப் கொடுத்ததனால் அந்த பட்டத்தை போடவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் இப்பொழுது அந்தப் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஆளு விஜய் தான் என்று ஒரு பேட்டியில் சரவணன் இந்த தகவலை கூறினார்.