“ஒரே மாதிரி நடிக்க சொன்னாங்க”… பருத்திவீரனால் வாய்ப்புகளை இழந்த ‘செவ்வாழை’ சரவணன்… அடப்பாவமே!!

Published on: October 18, 2022
Saravanan
---Advertisement---

சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை கொண்டிருந்த நடிகர் சரவணன், தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் பயின்றார். அப்போது அவரை பார்த்த இயக்குனர் ராதா பாரதி, “வைதேகி வந்தாச்சு” என்ற திரைப்படத்தில் சரவணனை அறிமுகப்படுத்தினார்.

Saravanan
Saravanan

அதனை தொடர்ந்து ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்”, “தாய் மனசு”, என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த சரவணன், திடீரென நடுவில் காணாமல் போனார். அதன் பிறகு வெகுகாலம் கழித்து அவர் மீண்டும் நடித்த திரைப்படம்தான் “பருத்திவீரன்”.

கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான “பருத்திவீரன்” திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் சுவாரஸ்யமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் செவ்வாழை என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரமாக அமைந்தது. “பருத்திவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சரவணன்.

Paruthiveeran
Paruthiveeran

தமிழ் சினிமாவில் ஒருவரின் கதாப்பாத்திரம் தனித்துவமாக பேசப்பட்டுவிட்டால், அதில் நடித்த நடிகருக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் சாயலிலேயே நடிக்கும்படியான பல வாய்ப்புகள் வருவது சகஜமான விஷயம்தான். இதற்கு நடிகர் சரவணனும் தப்பவில்லை.

இந்த நிலையில் ஒரு முறை ஓரு பேட்டியில் நிருபர் ஒருவர் “பருத்திவீரன் திரைப்படத்தில் கிடைத்த அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொண்டீர்களா?” என சரவணனிடம் கேட்டிருக்கிறார்.

Saravanan
Saravanan

அதற்கு பதிலளித்த சரவணன் “இல்லை. பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு வந்த கதாப்பாத்திரங்கள் அனைத்திலுமே செவ்வாழை கதாப்பாத்திரத்தின் சாயல் அப்படியே இருந்தது. திரும்ப திரும்ப அது போன்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.