என்னது அந்த படத்தின் இரண்டாம் பாகமா? - மீண்டும் சசிகுமாருடன் இணையும் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார் இயக்குனர் சசிகுமார். சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் சசிகுமார். இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பாலா இயக்கிய சேது படத்தில் கூட உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார்.
சுப்பிரமணியபுரம் படம் எந்தளவு வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்தது. காதல், நட்பு, துரோகம் என அனைத்தும் கலந்த கலவையாக அந்தப் படம் அமைந்தது. சசிகுமார் வந்த பிறகு தான் நட்பின் ஆழம் படங்களில் காண்பிக்கப்பட்டது.
அந்தப் படத்திற்கு பிறகு நாடோடிகள் படத்தை இயக்கி அந்தப் படமும் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. தொடர்ந்து நடிப்பின் மீதும் ஆர்வம் காட்ட தொடங்கினார். சசிகுமார் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.
அதனால் அவரின் மார்கெட் சரியதொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் இணைந்தார். அதன்பின் சமீபத்தில் வெளியான அயோத்தி படம் சசிகுமாரின் நடிப்பை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டியது. மிகக்குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் சசிகுமார் என்று பல ஊடகங்களில் செய்திகளாக வெளியானது. இந்த நிலையில் மீண்டும் படத்தை இயக்கும் பொறுப்பை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. சசிகுமார் இயக்கத்தில் மீண்டும் ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சுப்பிரமணியபுரம் இரண்டாம் பாகம் வருமா?வராதா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில் ஜெய்யுடன் மீண்டும் சசிகுமார் இணைவது ரசிகர்கள் மத்தியில் ஒருவேளை இரண்டாம் பாகம் தான் வரப்போகிறதா என்று யோசிக்க வைத்தது. ஆனால் அந்த படத்தின் முதல் பாகத்தில் ஜெய் இறந்து போற மாதிரி காட்டியிருக்கும் நிலையில் எப்படி ஜெய்யை வைத்து எடுப்பார், அதனால் இது வேறொரு புதிய கதை என்று சொல்கிறார்கள்.