வருடங்களை தாண்டி நிகழ்ந்த அதிசயம்.. திடீரென டிரெண்டாகும் சசிகுமார்!..
தமிழ் சினிமாவில் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் யாரென்றால் நடிகர் சசிகுமாரை குறிப்பிடலாம். ‘குத்துறவன் நண்பனாகவே இருந்தாலும் அதை வெளியில சொல்லக் கூடாது’ என்ற புது தத்துவத்தை நட்புக்கு அடையாளமாக காட்டியவர் சசிகுமார்.
‘சுப்பிரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் முதன் முதலாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் முதல் படத்திலேயே யாருயா இவர்? என்று ஆச்சரியப்படுகிற அளவிற்கு தரமான சம்பவத்தை செய்தார். அந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் நட்பு மற்றும் காதல் இவைகளை அடிப்படையாக கொண்டு ‘ நாடோடிகள்’ என்ற படத்தை எடுத்து பெரிய ஹிட் கொடுத்தார்.
இந்த இரண்டு படங்களும் சசிகுமாரின் கெரியரை காலங்காலமாக நின்னு பேசவைக்கும் படங்களாக அமைந்தன. அதனை அடுத்து ‘போராளி’ என்ற படத்தை எடுத்தார். ஆனால் அது எதிர்பார்த்த வகையில் போகாததால் மீண்டும் தன் பழைய ஃபார்முலாவிற்கு மாறினார். ‘சுந்தரபாண்டியன்’என்ற நட்பை அடிப்படையாக கொண்ட கதையில் அந்தப் படத்தை எடுத்தார். படம் தாறுமாறு வெற்றி.
ஆனால் இந்த படங்களுக்கு பிறகு அவர் நடித்த இயக்கிய படங்கள் யாவும் சரிவர போகவில்லை. கடைசியாக கிடாரி படம் ஓரளவு வெற்றியை பதிவு செய்திருந்தாலும் முன்பு இருந்த வேகம், விவேகம் ஆகியவை அவர் படங்களில் காண முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாம். மதம் , இனம் ஆகியவற்றையும் தாண்டி எழும் பிரச்சினைகளை சந்திக்கும் ஒரு மனிதனின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் அயோத்தி. இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்க சசிகுமாருடன் விஜய் டிவி புகழ், யாஷ்பால் சர்மா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தை அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் சசிகுமார் இஸ் பேக் என்ற ஹேஷ் டேக்கை பின்பற்றி வருகின்றனர். அந்த அளவுக்கு படம் வெற்றி நடைப் போட்டு வருகிறது. மேலும் கிட்டத்தட்ட 11 வருடங்கள் கழித்து சசிகுமாருக்கு இது ஒரு நல்ல வெற்றி என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : நான் பட்ட பாடு இருக்கே?.. எம்ஜிஆர் மட்டும் இல்லைனா? அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி நடிகை ஓபன் டாக்..