சூர்யா, விஜய் நடிக்கும் சரித்திர கதை!. நானும் நடிக்கிறேன்!.. ஹைப் ஏத்தும் சசிக்குமார்!…

சுப்பிரமணியபுரம் படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் சசிக்குமார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தின் மேக்கிங்கை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பையிலிருந்து ஃபிளைட் பிடித்து சென்னை வந்து சசிக்குமாரை நேரில் சந்தித்து பாராட்டிவிட்டு போனார். சசிகுமாரின் வருகையை தமிழ் சினிமாவே கொண்டாடியது.
சுப்பிரமணியபுரம் வெற்றிக்கு பின் அதுபோலவே கதையம்சம் கொண்ட நிறைய திரைப்படங்கள் வெளிவந்தது. இந்த படத்திற்கு பின் ஈசன் என்கிற படத்த இயக்கினார். அக்காவின் மரணத்திற்கு தம்பி பழிவாங்கும் கதையாக அப்படம் உருவாகியிருந்தார். அந்த படத்திற்கு பின் சசிக்குமார் சினிமாவில் ஹீரோவாக பிஸி ஆகிவிட்டார்.
நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி, வெற்றிவேல், கிடாரி, நாடோடிகள் 2, அயோத்தி, கருடன் என பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நந்தன் படமும் ஒரு சிறந்த படமாக அமைந்தது. இதுவரை 10 படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். வருகிற மே 1ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் அனுமதியின்றி சென்னை வந்து இங்கு வசிக்க ஆசைப்படுகிறார்கள். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனையை இப்படம் பேசுகிறது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக படம் பார்த்த சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக படத்தின் கடைசி அரை மணி நேரம் ரசிகர்கள் அழுது கொண்டே இருப்பார்கள் என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
ஒருபக்கம், சசிக்குமார் எப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்று அவர் அளித்த பேட்டியில் ‘10 வருடங்களுக்கு முன்பு ஒரு சரித்திர கதையை இயக்க முயற்சி செய்து சூர்யாவிடம் கதை சொன்னீர்கள். அதன்பின் விஜயிடம் அந்த கதையை சொன்னீர்கள். பாகுபலி வந்தபின் உங்கள் கதை மீது உங்களுக்கு மேலும் நம்பிக்கை வந்தது. இப்போது அது எந்த நிலையில் இருக்கிறது?’ என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன சசிக்குமார் ‘சரியான ஹீரோக்கள் கிடைக்கும் போது அந்த கதையை கண்டிப்பாக இயக்குவேன். ஏனெனில், படத்தின் பட்ஜெட் அதிகம். பெரிய ஹீரோக்கள் கிடைத்தால் மட்டுமே அதை எடுக்க முடியும். எப்போது என சொல்ல முடியாது. ஆனால், கண்டிப்பாக அது நடக்கும். அதற்கு முன் வேறொரு சரித்திர கதையை இயக்க திட்டமிட்டிருக்கிறேன். வருகிற ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. அதில் நானும் ஒரு வேடத்தில் நடிக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.