தலைமுடி நரைச்சாலும் இன்னும் அந்த ஆசை விட்டபாடில்லை! கட்டப்பா உருட்டிய உருட்ட பாருங்க
Actor Sathyaraj: சத்யராஜ் என்றாலே நையாண்டி நக்கல் கிண்டல் ஹீரோயிசம் என எல்லா பக்கமும் கபடி விளையாடுபவர். தகிடு தகிடு என்ற வசனத்தை 80 k கிட்ஸ் முதல் இப்ப உள்ள 2k கிட்ஸ் வரை யாராலும் மறக்க முடியாது. தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர். இவர் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப காலங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
அதன் பிறகு இவரை ஹீரோவாக அந்தஸ்தை உயர்த்தியவர் பாரதிராஜா .கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்த ஒரு திரைப்படம் தான் சத்யராஜுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதை எடுத்து வால்டர் வெற்றிவேல், மக்கள் என் பக்கம், மிஸ்டர் பாரத் போன்ற படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் பெருமளவு பேசப்பட்டதால் ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோவாக மாறினார் சத்யராஜ்.
இதையும் படிங்க: ஜெமினிகணேசனை ‘சாம்பார்’னு ஏன் சொன்னாங்க தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வந்த சத்யராஜ் திடீரென குணச்சித்திர நடிகராக மாறியது தான் அனைவருக்கும் அதிர்ச்சி. ஏனெனில் இவருடன் பயணித்த ரஜினி கமல் இன்று வரை ஹீரோவாகவே அதுவும் அஜித் விஜய் சூர்யா போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இவரால் மட்டும் ஏன் அந்த ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதற்கு அவரே சொன்ன காரணம் தான் இது.
ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஹீரோ சத்யராஜ் என்பதற்கான மார்க்கெட்ட குறைந்துவிட்டது.. அதனை அடுத்து அஜித் சூர்யா தனுஷ் கார்த்தி போன்ற பெரிய பஞ்ச் உள்ள நடிகர்கள் வெளிவர தொடங்கினார்கள. அவர்களுடன் ஈடுகொடுக்க முடியவில்லை. கடந்த பத்து வருடங்களாகவே என்னுடைய படங்கள் சரியாக போகாததால் என்னுடைய மார்க்கெட்டும் டல் அடித்து விட்டது.
இதையும் படிங்க: கொய்யால தல யாரு! முடிஞ்சா கொடுங்க… சிறுத்தை சிவா கூட்டணியில் இருக்கும் சிக்கல்
சரி நல்ல மார்க்கெட் உள்ள இயக்குனர்களை தேடி பிடிக்கலாம் என நினைத்தால் அதற்கான கதைக்களமும் அமையவில்லை. இதனாலையே என்னுடைய ஹீரோ மார்க்கெட் பறிபோனது என சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.