இவர்கிட்ட எல்லாம் வாலாட்ட முடியுமா?.. ஷாரூக்கானுக்கு சத்யராஜ் போட்ட அக்ரிமென்ட்!..

by Rohini |   ( Updated:2023-01-30 13:06:16  )
sathya
X

sathyaraj sharukhan

தமிழ் சினிமாவில் முக்கியமான அந்தஸ்தில் இருக்கும் நடிகர் சத்யராஜ். இவர் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின் ஹீரோவாக உயர்ந்தார். இவரின் கெரியரில் வால்டர் வெற்றிவேல் படம் இவரை ஒரு முழு ஹீரோவாக அங்கீகரித்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படமாகும்.

அதே போல் அமைதிப்படை திரைப்படமும் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜை ஒரு உச்ச நிலையை அடைய வைக்க காரணமாக இருந்தது. எம்ஜிஆர் மீது அதிக பற்றுள்ள நடிகர்களில் சத்யராஜ் மிகவும் முக்கியமானவர். அவரை மாதிரி சில சமயங்களில் நடித்துக் காட்டுவது , அவரை மாதிரி பேசுவது என எம்ஜிஆர் மீது தனக்கு இருக்கும் காதலை அவ்வப்போது வெளிக் கொணர்வார்.

sathya1

sathyaraj

மேலும் தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் நாட்டின் மீதும் அதிக அக்கறை கொண்டவரும் கூட. அதற்கான வெளிப்பாட்டை பல மேடைகளில் சத்யராஜ் பேசி நாம் காதுபட கேட்டிருப்போம். ஏன் காவிரி ஆறு பிரச்சினையில் கர்நாடகாவை வெளுத்து வாங்கியிருப்பார். அந்த வீடியோ மிகவும் வைரலானது.

இந்த நிலையில் இது சம்பந்தமான மற்றுமொரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. சத்யராஜ் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிப் படங்களிலும் நடித்து தன் பெருமையை நிலை நாட்டியவர். குணச்சித்திர வேடங்களில் இப்போது பிரபலமான நடிகர்யாரென்றால் அது சத்யராஜ் தான்.

இதையும் படிங்க : விக்னேஷ் சிவன் சொல்றதெல்லாம் கம்பி கட்டுற கதையால இருக்கு! அஜித் 62 படத்தில் இருந்து விலகிய காரணம் என்ன தெரியுமா??

அப்பா, தாத்தா என மூத்த கதாபாத்திரத்தில் இப்போது சத்யராஜ் தான் டிரெண்டாகி வருகிறார். பல முன்னனி நடிகர்களுக்கு அப்பாவாகவும் மாமனராகவும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். அந்த வகையில் ஷாரூக்கான் , தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படம் மிகவும் பிரபலமடைந்த திரைப்படமாகும்.

sathya2

sathyaraj

இந்தப் படத்தில் தீபிகாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார் சத்யராஜ். அதுவும் அந்தப் படத்தில் தீபிகா தமிழ்ப் பெண்ணாக நடித்திருப்பார். அப்போது இந்த படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனரிடம் அக்டிமெண்ட் பேப்பரில் சில விஷயங்கள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தாராம் சத்யராஜ். அதாவது படத்தின் கதைப்படி ஷாரூக்கான் தீபிகாவிடம் அவரின் அப்பாவின் செயல்களை விமர்சனம் செய்வது போல் வசனங்கள் இருக்கும். அதாவது உன் அப்பன் ஒரு லூஸா என்றெல்லாம் கேட்கிற மாதிரி இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு சத்யராஜ் என்னை என்னவேண்டுமென்றால் திட்டட்டும் ஆனால் உன் அப்பன் ஒரு லூஸா என்பதற்கு பதிலாக உன் ஊரே ஒரு லூஸா என்பது மாதிரி இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி தான் நடித்தாராம். இதிலிருந்து சத்யராஜ் தமிழ் நாட்டின் மீது எந்த அளவு பற்று வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதை ஒரு பேட்டியில் சத்யராஜே கூறியிருந்தார்.

Next Story