கமலின் ஃபிளாப் படத்தை கிண்டலடித்த சத்தியராஜ்!.. பல வருடம் கழித்து இயக்குனர் பகிர்ந்த சீக்ரெட்!...

திரையுலகில் எல்லா நடிகர்களும் தோல்வி படங்கள் கொடுப்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் ரஜினி - கமல் மற்றும் தனுஷ் - சிம்பு - சிவகார்த்திகேயன் வரை எல்லா நடிகர்களுக்கும் சில திரைப்படங்கள் தோல்விப்படங்களாக அமையும். பல தோல்விப்படங்களுக்கு பின் ஹிட் படம் கொடுத்து மீண்டு வந்த நடிகர்களும் உண்டு.

விஜய், அஜித் கூட அப்படித்தான். அஜித்தெல்லாம் பல வருடங்கள் தோல்விப்படங்கள் கொடுத்தவர். விஜய் துவக்கத்தில் அவரின் அப்பாவின் இயக்கத்தில் நடித்த படங்கள் அவ்வளவு பெரிய வெற்றியை பெறவில்லை. பூவே உனக்காக திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது. கில்லி படத்தின் மெகா வசூல் அவரை முன்னணி நடிகராக மாற்றியது. தற்போது ரூ.130 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக விஜயும், ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அஜித்தும் உயர்ந்துள்ளனர். இதற்கு பின்னால் பல தோல்விகள் இருக்கிறது.

kamal1

kamal1

திரையுலகில் பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்தவர் கமல்ஹாசன். பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்தவர். திரையுலகை, ரசிகர்களை, வழக்கமான சினிமா ரசனையை எப்படியாவது மாற்ற வேண்டும் என அரும்பாடு படும் ஒரு சிறந்த கலைஞர் அவர். இதற்காக அவர் பல இழப்புகளையும் சந்தித்தார். பல வருடங்களுக்கு பின் அவரின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது.

jappanil

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன். இந்த திரைப்படம் 1984ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை முழுக்க முழுக்க ஜப்பானில் எடுத்தனர், ஆனால், இப்படம் ஒரு தோல்விப்படமாகவே இருந்தது. சமீபத்தில் ஒரு யுடியூப் சேனனில் இதுபற்றி பேசிய எஸ்.பி. முத்துராமன் ‘இப்படத்தில் கமல் இரட்டை வேடம் என்பதால் மிக்சர் கேமரா தேவைப்பட்டது.

Sathyaraj

Sathyaraj

ஜப்பானில் அந்த கேமரா கிடைக்கும் என நினைத்து நாங்கள் எல்லோரும் ஜப்பானுக்கு சென்றுவிட்டோம். ஆனால், அந்த கேமரா அங்கு கிடைக்கவில்லை. அது அவுட் ஆஃப் டேட் ஆகிவிட்டது. எனவே, கதையையே மாற்றி எடுக்க வேண்டியதாகிவிட்டது. அப்படமும் தோல்வி அடைந்தது. படசுருளை 24 பெட்டிகளில் எடுத்து வந்தோம். படம் பார்த்த சத்தியராஜ் ‘24 பெட்டி எடுத்து வந்தீங்க. ஒரு பெட்டி மட்டும் மிஸ் ஆயிடுச்சி. அதை கதைப்பெட்டி’ என என்னிடம் கிண்டலடித்தார்’ என எஸ்.பி.முத்துராமன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Articles
Next Story
Share it