வில்லன் லுக்கே இல்ல! ரத்தம் தெறிக்க அந்தப் படத்திற்காக எப்படி ரெடியானார் தெரியுமா சத்யராஜ்?
Actor Sathyaraj: தமிழ் சினிமாவில் இப்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ். எந்த ஒரு புதுப்படம் வெளியானாலும் அதில் சத்யராஜ் இல்லாமல் அந்த படம் வெளிவராது. அப்படி ஒரு நிலையில் மிகவும் பிஸியான நடிகராக மாறியிருக்கிறார்.
சிங்கப்பூர் சலூன் என்ற புதிய படத்திலும் சத்யராஜ் நடித்திருக்கிறார். சட்டம் என் கையில் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தன் சினிமா அறிமுகத்தை தொடங்கினார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடிக்கும் வாய்ப்பு சத்யராஜுக்கு வந்தது.
இதையும் படிங்க: போட்டுத்தாக்கு! களைகட்டும் நெட்ஃபிளிக்ஸ்.. இந்தாண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்
இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து கிடைத்த வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் சத்யராஜ். ஹீரோவாக அவர் நடித்ததை விட வில்லன் கதாபாத்திரத்தில்தான் அவரின் அபார நடிப்பு வெளிப்பட்டது.
இந்த நிலையில் திக் திக் நிமிடமாக சத்யராஜை மிகவும் கொடூரமாக காட்டிய படம் ‘ நூறாவது நாள்’. மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் சத்யராஜ்தான் வில்லன். இருந்தாலும் இந்த வில்லன் லுக் போதாது என சொல்லியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வடிவேலுவை அடிச்சேன்! என் வாய்ப்பே போச்சு – மனம் வருந்தி பேசிய தனுஷ் பட நடிகை
அதன் பிறகு மணிவண்ணனின் அனுமதியோடு மொட்டை அடித்துக் கொண்டு வந்தாராம் சத்யராஜ். பின் ஸ்பாட்டிற்கு வந்த சத்யராஜ் அங்கு வைக்கப்பட்ட வேறொருவரின் சிவப்பு நிற ஜெர்கின், கூலிங் க்ளாஸ், மற்றும் ஃபேக் ரத்தம் என தன் முகத்தில் சிதறிவாறு போய் நின்றாராம் சத்யராஜ். அந்த படத்திற்காக சத்யராஜ் அவராகவே தன்னை தயார்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இன்று வரை இந்திய அளவில் பேசப்பட்ட கதாபாத்திரமாக பார்க்கப்படுகிறது. அதே போல்தான் அவரின் ஒரு சில வசனங்கள் இன்றளவும் பெரும் புகழ்பெற்ற வசனங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக என் கேரக்டரே புரிஞ்சிக்க மாட்டிக்கீங்களே மற்றும் தகடு தகடு என்பன போன்ற வசனங்கள்.
இதையும் படிங்க: உருட்டு உருட்டு!.. கேப்டன் மில்லர் வசூலை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..