latest news
விஜய் நம்மாளுதான்… கேட்டா கண்டிப்பா கொடுப்பாரு!.. சத்யராஜ் செம கலாய்…
தற்போது விஜய் குறித்து சத்யராஜ் சொன்ன ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் அரசியலில் தீவிரமாக இறங்கிய நிலையில் அவருடைய கட்சி பற்றியும் அவருடைய கொள்கைகளை பற்றியும் சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். தற்போது சத்யராஜ் ஜீப்ரா என்ற ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அந்த படத்தின் ப்ரோமோஷன் தான் இப்போது நடந்து வருகிறது. அந்த படத்தை பற்றிய தன்னுடைய அனுபவங்களை அந்த பேட்டியில் கூறி வருகிறார் சத்யராஜ். தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் சத்யராஜ். வில்லனாக ரஜினி கமல் விஜயகாந்த் இவர்கள் படங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோவாக அவர்களுக்கே டப் கொடுக்கும் நடிகராக மாறினார் சத்யராஜ்.
இதையும் படிங்க: திருப்பதியில் சந்தானம்.. லட்டு கொடுக்கப்போன ரசிகர்! சந்தானத்தின் ரியாக்ஷனை பாருங்க
வில்லனாக நடித்து புகழ்பெற்றதை விட வில்லனாக நடித்துதான் பெரும் புகழை பெற்றார். அவர் ஹீரோவாக அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அந்தப் படங்கள் இன்றளவும் பெரிய அளவில் பேசும் படங்களாக மாறி இருக்கின்றன. சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
அதுவும் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ்பெற்றார் சத்யராஜ். இப்போது வரைக்கும் அவரைப் பார்த்தாலே கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் அது. சினிமாவின் மிகவும் பிஸியான நடிகர்களில் இப்பொழுது சத்தியராஜும் ஒருவர். இந்த நிலையில் தான் ஜீப்ரா பட பிரமோஷனில் கலந்து கொண்டு பேசியபோது விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் சத்யராஜ் .
இதையும் படிங்க: Pushpa2: தமிழ் மொழிதான் எப்பவும் சூப்பர்!.. மனம் விட்டு பாராட்டும் புஷ்பா பட ஹீரோ..
அவரிடம் நிருபர் ஒருவர் விஜயின் கட்சியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வருகிறது. அந்தக் கட்சியில் எந்த பொறுப்பு கொடுத்தால் எந்த பதவி கேட்பீங்க ன கேட்டபோது பெரியார் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும். அதுவும் விஜய் நம்ம ஆளு .கேட்டா கண்டிப்பா கொடுப்பாரு எனக் கூறியிருந்தார் .
அது மட்டுமல்ல செந்தூரப்பாண்டி படத்திற்கு முன்பாகவே அவர் பள்ளி பருவத்தில் இருந்தே விஜய் எனக்கு நன்றாக தெரியும். அவரது வீட்டில் தான் பல படங்கள் சூட்டிங் நடந்திருக்கிறது .அப்பொழுது நிறைய பார்த்திருக்கிறேன் .பேசி இருக்கிறேன் .ஆனால் மாநாட்டில் இந்த அளவுக்கு பேசுவார் என நான் நினைக்கவே இல்லை. என்னுடைய கொள்கை தலைவனான பெரியாரை அவர் கொள்கை தலைவன் என சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என சத்யராஜ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.