வாழ்க்கையில மறக்கமாட்டேன்!.. புலம்பும் கட்டப்பா!... அமாவாசைக்கே அல்வா கொடுத்த இயக்குனர்!..

சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து, கதாநாயகன் வாய்ப்பு கிடைத்து, தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியும். ஆனால், இது நடக்க பல வருடங்கள் ஆகிவிடும், சிலருக்கு மட்டுமே இது சீக்கிரம் நடக்கும்.

எம்.ஜி.ஆரை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகர் சத்தியராஜ். கோவையிலிருந்து சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடியவர். துவக்கத்தில் வில்லன்களில் அடியாட்களில் ஒருவராக பல படங்களிலும் நடித்திருக்கிறார். ‘யெஸ் பாஸ்’ என்கிற ஒரு வசனம் மட்டுமே இவருக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க: இனிமே லேட் பண்ணா பட்டை நாமம் தான்!.. முன்னாடியே சீட் போட்ட தனுஷ்!.. ராயன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் நடிப்பை விட்டுவிட்டு இயக்குனராகலாம் என அவர் முடிவெடுத்த நேரத்தில்தான் ‘நூறாவது நாள் ’பட வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சத்தியராஜுக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. விக்ரம், காக்கி சட்டை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்தார். இயக்குனர் பாரதிராஜா கடலோர கவிதைகள் படம் மூலம் இவரை ஹீரோவாக மாற்றினார்.

மணிவண்ணன் கூட்டணியில் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார். பல படங்களில் கதாநாயகி அல்லது ஹீரோவின் அப்பாவாக நடித்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் இவர். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள கூலி படத்திலும் சத்தியரஜ் நடிக்கவிருக்கிறார்.

sathyaraj

sathyaraj

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ‘நீங்கள் வாங்கியதிலேயே மறக்க முடியாத அல்வா எது?’ என்கிற கேள்விக்கு பதில் சொன்ன சத்தியராஜ் ‘சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது ‘பரமபதம்’ என்கிற படத்தில் நடிக்க கூப்பிட்டார்கள். நாங்கள் 4 பேர் சிறையில் இருந்து தப்பிப்பது போல காட்சி எடுத்தார்கள். ஜீப் போய்க்கொண்டிருக்கும்போதே கீழே குதிக்க முடியுமா?’ என கேட்டார்கள். அப்படியே குதித்து நடித்தோம். இந்த படத்தில் நமக்கு நல்ல வேடம் போல. 4 ஹீரோக்களில் நானும் ஒருவன்’ என சந்தோஷப்பட்டேன்.

ஆனால், அதன்பின் ஒரு மாதம் என்னை கூப்பிடவே இல்லை. விசாரித்ததில் அதில் வேறு நடிகர்கள் நடிக்கிறார்கள். எங்களை டூப் போட கூப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதுதான் நான் வாங்கியதிலேயே சிறந்த அல்வா’ என சிரித்தார் சத்தியராஜ்.

 

Related Articles

Next Story