விஜய் என்கிட்ட சொன்னத வேற யாரும் சொல்லமாட்டாங்க!.. நெகிழும் சதீஷ்!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். 30 வருடங்களாக திரையுலகில் வசூல் மன்னனாக கலக்கி வருகிறார். காதல், ஆக்சன், பன்ச் வசனம், நடனம் என அவரின் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். விஜய் பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
துவக்கத்தில் சார்லி, விவேக், வையாபுரி, சாப்ளின் பாலு, சிட்டி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், பெஞ்சமின் என பலருடனும் நடித்தார். வடிவேலுடன் சில படங்களில் நடித்தார். அவர் அப்படி நடித்து வெளியான மதுர, பகவதி, சுறா, ஃபிரண்ட்ஸ், காவலன், வசீகரா, சச்சின், போக்கிரி, வில்லு போன்ற படங்களில் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது.
இதையும் படிங்க: எச்.வினோத்த அடிச்சு சாவடிச்சிரலானு தோணுது! பார்த்திபனுக்கு அப்படி என்ன கோபம்?
அதேபோல், விவேக்குடன் விஜய் நடித்த பத்ரி, பிரியமானவளே, ஆதி, தமிழன், குஷி, யூத், திருமலை, குருவி, பிகில் போன்ற படங்களிலும் காமெடி சிறப்பாக இருந்தது. விஜயின் படங்களில் காமெடிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். மற்ற படங்களில் காமெடி நடிகர்கள் சிரிக்க வைத்தாலும் சச்சின், வசீகரா உள்ளிட்ட சில படங்களில் விஜயே காமெடி செய்திருப்பார்.
ஹீரோவே காமெடி செய்வது என்பது ரஜினியின் ரூட். அதை சரியாக பின்பற்றி போனார் விஜய். சில படங்களில் அது வொர்க் அவுட்டும் ஆனது. விஜயுடன் பைரவா, கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சதீஷ். சதீஷ் சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வந்தவர்.
எதிர்நீச்சல், ரெமோ, வேலைக்காரன், மான் கராத்தே போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். மறைந்த நாடக நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடிப்பு பயிற்சி எடுத்தவர் இவர். சில வருடங்களுக்கு முன்பு இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சதீஷ் ‘விஜய் சாருடன் நடித்து கொண்டிருந்த போது நான் வீடு வாங்குவது பற்றி அவரிடம் சொன்னேன். பல நாட்கள் கழித்து மீண்டும் அவருடன் நடித்தபோது ‘வீடு என்னாச்சி’ என என்னிடம் கேட்டார். ‘இல்ல சார் விலை அதிகமாக சொல்றாங்க. வாங்க முடியல’ என சொன்னேன். ‘உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு நாம பாத்துக்கலாம்’ என சொன்னார். அப்படி யாரும் சொல்லமாட்டாங்க. அதனால்தான் அவர் இன்னைக்கும் பெரிய ஸ்டாரா இருக்காரு’ என நெகிழ்ந்திருக்கிறார் சதீஷ்.