Connect with us
Baba

Cinema News

பாபா படத்தில் பாபாஜியாக நடித்த நடிகர் இவர்தான்? டபுள் பேமண்டு கொடுத்து குஷி படுத்திய ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் தயாரித்து கதை எழுதி நடித்த “பாபா” திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும் இப்போதும் அத்திரைப்படம் பலருக்கும் விருப்பமான திரைப்படமாக இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு மறு வெளியீடு செய்யப்பட்டது. இந்த மறு வெளியிட்டீல் ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது.

Baba

Baba

ரஜினிகாந்துக்கு “பாபா” திரைப்படம் ஒரு கனவு திரைப்படமாக இருந்தது. ரஜினிகாந்த் மகா அவதார் பாபாஜியின் மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு நாள் மகா அவதார் பாபாஜியின் வாழ்க்கை சரித்திரம் படித்தபோது அவருக்கு ஒரு ஒளிவட்டம் தோன்றி மறைந்ததாம். அந்த தாக்கத்தில்தான் “பாபா” படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

எனினும் ரஜினிகாந்தின் கனவுத் திரைப்படமான “பாபா” திரைப்படம் தோல்வியை தழுவியது ரஜினிகாந்திற்கு ஒரு கவலையான விஷயமாகவே இருந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி, நம்பியார் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

Baba

Baba

இத்திரைப்படத்தில் பிரபல நடிகரான ஷாயாஜி ஷிண்டே திவ்யானந்த பாரதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்தான் ரஜினிகாந்தை பாபாஜியிடம் அழைத்து செல்வார். இதில் பாபாஜியாக ஒரு உருவம் அமர்ந்திருக்கும். அவரது முகம் இருக்கும் பகுதியில் ஒரு ஒளிவட்டம் இருக்கும். ஆதலால் அவரது முகம் வெளிப்படையாக தெரியாது.

பாபாஜி கதாப்பாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் பாபாஜியாக ஷாயாஜி ஷிண்டேதான் நடித்தாராம். அதாவது ஷாயாஜி ஷிண்டே திவ்யானந்த பாரதியாகவும் நடித்திருக்கிறார், பாபாஜியாகவும் நடித்திருக்கிறார். இவ்வாறு இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்ததற்காக ரஜினிகாந்த் ஷாயாஜி ஷிண்டேக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை ஊதியமாக கொடுத்தாராம்.

இதையும் படிங்க: நிறைய இளையராஜா பாட்டை திருடியிருக்கேன்… பெரும் ரகசியத்தை வெளியிட்ட மனோபாலா!.

google news
Continue Reading

More in Cinema News

To Top