சிவாஜியை சமாளிக்க முடியாமல் தவித்த படக்குழு!.. சாமியாய் வந்த நடிகர்..

sivaji
தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன், நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமா மத்தியில் சிவாஜியை ஒரு கடவுளாகவே இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய இளம் தலைமுறைகள் பல பேர் இன்னும் சிவாஜியின் அந்த படத்தை பார்த்து சினிமாவிற்குள் வந்தேன் என்று சொல்வதுமுண்டு.

sivaji1
அந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார் சிவாஜி கணேசன். இந்த நிலையில் தேவர் மகன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பிரபல காமெடி நடிகர் சிஸ்ஸர் மனோகர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதாவது அந்தப் படத்தின் போது சிவாஜிக்கு ஃபேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்ததாம்.

sivaji2
அதனால் அவரை கவனமாக பாதுகாக்க சிவாஜிக்கு உதவியாக உதவியாளரை படக்குழு அணுகியிருக்கிறது. அதோடு ஒரு சில பேரை உதவியாக சிவாஜிக்கு வைக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால் சிவாஜிக்கு அது சரியாக படவில்லையாம்.
இதனால் படக்குழுவே என்ன இது? யாருமே சிவாஜிக்கு செட் ஆக மாட்டிங்காங்க என கடைசியாக சிஸ்ஸர் மனோகரை சிவாஜிக்கு உதவியாக அனுப்பியிருக்கிறார்கள். சிவாஜிக்கு சிஸ்ஸர் மனோகரை மிகவும் பிடித்து விட்டதாம். சிவாஜி சொல்றதை அப்படியே செய்யக் கூடிய உதவியாளராக இருந்ததால் சிவாஜியை மிகவும் கவர்ந்திருக்கிறார்.

scissor manohar
மேலும் சிஸ்ஸர் மனோகரின் உண்மையான பெயர் பழநியாம். அதனால் சிவாஜி பழநியப்பா என்று தான் அழைப்பாராம். ஒரு சமயம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சிவாஜிக்கு குடை பிடித்துக் கொண்டிருந்தாராம் சிஸ்ஸர் மனோகர். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் சிவாஜியின் உடல் நிலை கருதி சில நாள்கள் அந்தப் பழக்கத்தை செய்ய வில்லையாம்.
ஆனால் அப்போது சிவாஜிக்கு எல்லா வித பணிகளும் செய்து விட்டு சிவாஜியிடம் இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மறைமுகமாக சிகரெட் பிடிக்க சென்றிருக்கிறார். போன சில நிமிடங்களில் சிவாஜி ‘பழநியப்பா , பழநியப்பா ’ என கூப்பிட ஆரம்பித்து விட்டாராம். இது கமலின் காதில் விழ ஓடி வந்து பாத்திருக்கிறார்.
இதையும் படிங்க : வடிவேலு ஒன்னும் தானா ஜெயிக்கல!.. காரணமே நாங்கதான்!.. ஆக்ரோஷத்தை வெளிக்காட்டிய நடிகர்..
அங்கு மறைமுகமாக சிஸ்ஸர் மனோகர் சிகரெட் பிடிப்பதை பார்த்த கமல் அவரை போய் சத்தம் போட்டிருக்கிறார். மனோகரும் மன்னிப்பு கேட்டுவிட்டு சிவாஜியிடம் ‘உங்களிடம் சொல்லிவிட்டு தானே போனேன்’ என்று சொல்ல அதற்கு சிவாஜி ‘அப்படியாடா, மறந்திருப்பேன்’ என்று குழந்தை தனமாக கூறினாராம். இதை அந்தப் பேட்டியில் சிஸ்ஸர் மனோகர் கூறினார்.