தியேட்டரை இழுத்து மூடுங்க!.. ‘விடுதலை’ படத்தை பார்த்து விட்டு சீமான் ஆவேசமான பேச்சு.

by Rohini |   ( Updated:2023-03-31 10:09:31  )
seeman
X

seeman

இன்று பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் படம் ‘விடுதலை’. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை பவானியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை பவானி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கையாம். அவரின் நடிப்பு மிகப்பிரம்மாதம் என படம் பார்க்க வந்த பாரதிராஜா பெருமையாக கூறினார். இந்தப் படம் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு முக்கிய கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அமைந்தப் படமாகும்..

seeeman

மேலும் அதிகாரவர்க்கம், அடிமைத்தனம் என நாம் இயல்பாகவே அனுபவிக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் விடுதலை. இந்தப் படத்தை இன்று தமிழ் பேச்சாளர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் நடிகர் சீமான் பார்த்து அவருடைய கருத்துக்களை பகிர்ந்தார்.

படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தவர் சிறிது நேரம் கண்கள் கலங்கி பேசமுடியாமல் இருந்தார். அதனை தொடர்ந்து பேசிய சீமான் மிகவும் பெருமிதத்தோடு வெற்றிமாறனை பற்றி பேசினார். ஒரு ஆங்கிலப் படம் அளவிற்கு படத்தை அற்புதமாக எடுத்திருப்பதாக கூறினார். மேலும் நிரூபர் ஒருவர் ‘இந்தப் படத்தில் எங்கேயாவது அதிகாரவர்க்கம், போலீஸ் , கொடுமைக்கு ஆளாகும் மக்கள் சம்பந்தப் பட்ட காட்சிகள் மிகைப்படுத்தப் பட்டு காண்பிக்கப்பட்டதா நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சீமான் ‘அப்படியெல்லாம் இல்ல, எதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் இந்தப் படம் சொல்கிறது, காலங்காலமாக கனிம வளங்களை சுரண்டி மக்களை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை எதிர்த்து தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம், மேலும் தீர்ந்து போகும் வளங்களை மட்டுமே சுரண்டுகின்றனர், தீராத வளங்கள் எவ்ளவோ இருக்கு, 6 வழிச் சாலை , 4 வழிச் சாலை நாங்களா கேட்கிறோம், வளங்களை திருடிக் கொண்டு போகும் முதலாளிகளுக்காக அந்த சாலைகளை போடுகின்றனர், இதையெல்லாவற்றையும் தான் இந்தப் படம் சொல்கிறது ’ என மிக ஆவேசமாக பேசினார்.

மேலும் நேற்று பத்து தல படம் திரையிடப்பட்ட ரோகிணி தியேட்டரில் தீண்டாமை கொடுமை சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தது, அதை பற்றி கேட்கையில் ‘யாரெல்லாம் கண்டனம் தெரிவிக்கின்றனர், முதலில் அந்த தியேட்டரை இழுத்து மூடுங்க’ என கோபத்துடன் பேசிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க :‘பொன்னியின் செல்வன்’ல் எனக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பரிசு!.. மார்தட்டிக் கொள்ளும் சரத்குமார்..

Next Story