செந்தாமரைக்குள் புதைந்திருக்கும் சீக்ரெட்!..மாறி மாறி பந்தாடிய எம்ஜிஆரும் கலைஞரும்!..
60களில் ஆரம்பித்த தனது பயணம் எம்ஜிஆர்,சிவாஜி, ரஜினிகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களோடு தொடர்ந்தவர் நடிகர் செந்தாமரை. சிவாஜி, எம்ஜிஆருக்கு அடுத்த படியாக தனது சினிமா வாழ்க்கையை முழுவதுமாக ரஜினியுடனயே பயணித்தார்.
ரஜினியின் விருப்பமான வில்லன்
அதாவது ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவே மாறினார் நடிகர் செந்தாமரை. நடிக்க வந்த புதிதில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த செந்தாமரை நடிகர் பாக்யராஜிடம் ‘நான் நன்றாக நடிக்க கூடியவன், பல நாடகங்களில் என் நடிப்பை பாராட்டி பேசியிருக்கின்றனர். அப்படி இருக்க படங்களில் ஏதோ ஒரு கூட்டத்தில் நிறுத்தி கூச்சல் போடச் சொல்கிறார்கள், நீங்களாவது ஒரு சரியான ரோலில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்’ என கூறியிருக்கிறார்.
பாக்யராஜும் நல்ல ரோல் வந்தால் தருகிறேன் என்று கூறிவிட்டு தூரல் நின்னு போச்சு படத்தில் ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்து முன்னனி படுத்தினார் பாக்யராஜ். அந்த படத்திற்கு பிறகு தான் ரஜினிக்கு போட்டியாகவே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்ட ஆரம்பித்தார்.
செந்தாமரையின் தங்கப்பதக்கம்
ஆனால் முதலில் பல நாடகங்களை அரங்கேற்றி வந்தவர் தன்னுடைய ‘இரண்டில் ஒன்று ’ நாடகத்தை அரங்கேற்றியவர் அந்த நாடகத்திற்கு கிடைத்த அமோக வெற்றி சிவாஜியை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அந்த நாடகத்தை பார்த்து அதில் செந்தாமரையின் உயர் காவல் அதிகாரியின் தோற்றம் சிவாஜியை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
உடனே அந்த நாடகத்தின் உரிமையை சிவாஜி செந்தாமரையிடமிருந்து வாங்கி சில மாற்றங்களை செய்து செந்தாமரையின் தோற்றத்தில் சிவாஜி நடித்து தங்கப்பதக்கம் என்று பெயர் மாற்றம் செய்து நாடகமாக வெளியிட்டார். அதற்கும் கிடைத்த இமாலய வரவேற்பால் அதை படமாக தயாரித்தார் சிவாஜி.
எம்ஜிஆர் அடைக்கலம்
நடிகச் செந்தாமரை காஞ்சிப்புரத்தில் அறிஞர் அண்ணாவின் வீட்டெதிரே குடிபெயர செந்தாமரையின் தமிழ் உச்சரிப்பையும் நடிப்பையும் பார்த்து கலைஞரிடம் அனுப்பி வைத்திருக்கிறார். அவரோ ஒரு சிபாரிசு கடிதம் கொடுத்து எம்ஜிஆரிடம் செந்தாமரையை அனுப்பி வைத்திருக்கிறார். எம்ஜிஆரும் செந்தாமரையை தன்னுடைய நாடக மன்றத்தில் சேர்த்திருக்கிறார்.
அட்வகேட் அமரன்’, ‘இன்பக் கனவு’, ‘சுமை தாங்கி’ போன்ற எம்ஜிஆர் நாடக மன்றத்தால் நடத்திய நாடகங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார் செந்தாமரை. ஒரு சமயம் ஒத்திகையின் போது கலைஞரை பற்றிய விவாதம் அங்கு நடந்து கொண்டிருக்க கலைஞருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் செந்தாமரை. உடனே நாடக மன்றத்தில் இருந்து செந்தாமரையை நீக்கியிருக்கிறார் எம்ஜிஆர்.
இதை அறிந்த கலைஞர் என்ன நடந்தது என செந்தாமரையிடம் கேட்க ‘அது ஒரு செல்ல சண்டை,சிறிய சண்டை, யார் பற்றியும் நான் குறை கூற மாட்டேன், யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்’ என்று சடார் என பதில் கூற இந்த கோபமான பேச்சு கலைஞருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.
கலைஞரின் கோபம்
சிலகாலம் பேசாமல் இருந்த கலைஞருக்கு செந்தாமரை நாடகம் ஏதுமில்லாமல் கஷ்டப்படுகிறார் என்று தெரியவர
அவரை சிவாஜி நாடக மன்றத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பின் தன்னுடைய திமுக ஊழியராகவும் அனுமதித்திருக்கிறார். சிலகாலம் திமுகவில் கட்சி பணி ஆற்றினாராம் செந்தாமரை. ஆனால் அன்று என்ன நடந்தது என யாருக்குமே சொல்லாமலே இறந்திருக்கிறார் செந்தாமரை.