யாருக்கும் தெரியாது.. அந்தப் படத்தில் நான்தான் ஹீரோ - ஷாக் கொடுத்த செந்தில்! அப்போ அவரு?

senthil
Actor Senthil: தமிழ் சினிமாவில் ஹீரோ இல்லாமல் கூட படம் எடுக்க முடியும். ஆனால் இவர்கள் இல்லாமல் படமே இல்லை என்றுதான் 80, 90கள் காலத்தின் நிலைமை இருந்தது. அவர்கள் வேறு யாருமில்லை. கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள்தான்.
இவர்களின் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாத அளவில் நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்து வந்தார்கள். அதுவும் கவுண்டமணியிடம் எப்போதும் அடி வாங்கும் கேரக்டராகவே செந்தில் நடித்திருப்பார். அது பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் சிரிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்ததனால் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.
இதையும் படிங்க: இவனுக்கு நடிப்பே வராது.. அந்த நடிகரை கூட்டி வாங்க!.. ரஜினியை மோசமாக திட்டிய பாலச்சந்தர்…
ஒரு கட்டத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்க் ஆரம்பித்த பிறகுதான் செந்தில் தனியாக நடிக்க ஆரம்பித்தார். அதுவரை கவுண்டமணியுடன்தான் அவர் பயணம் தொடர்ந்தது. பிரபல நகைச்சுவை நடிகர்களாக இருந்து அதன் பின் ஹீரோவாக மாறிய பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
வடிவேலு, விவேக், சந்தானம், நாகேஷ் , கவுண்டமணி என ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் செந்தில் மட்டும் ஹீரோவாக எந்த படத்திலும் நடிக்க வில்லை என்பதுதான் பலரது கேள்வி.
இதையும் படிங்க: ரஜினியின் மனதுக்குள் சினிமா ஆசையை விதைத்த தோழி!.. இதுவரை வெளிவராத தகவல்!..
இதை அவரிடமே கேட்டதற்கு அதற்கு பதிலளித்த செந்தில் ‘இல்லை. ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால் அது யாருக்கும் இதுவரை தெரியாது’ என கூறி ஷாக் கொடுத்தார். ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்’ என்ற படம்தான் அது என கூறினார்.
அந்தப் படம் பாண்டியராஜன் நடித்த படமாகும். அதில் படமுழுக்க பாண்டியராஜனுடன்தான் செந்தில் கூடவே வருவார். அப்போது ஹீரோவுடனேயே பயணம் செய்யும் கதாபாத்திரம் என்றும் டபுள் ஹீரோ சப்ஜக்ட் என்றும்தான் செந்திலிடம் கூறினார்களாம். அதனால்தான் அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக நான் நடித்திருப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: வில்லனாலே மாஸுனு யாரு சொன்னா? 3 காமெடி நடிகர்கள் சேர்ந்து வில்லனாக நடித்த படம் தெரியுமா?